உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

மறைமலையம் -6

துறவிமகள் மேல்வைத்த தொல்காதல் மறைத்த மறதியெனும் இருள்நெஞ்சை மற்றகன்ற பின்னே உறவருந்து மெனைக்குறியிட் டுலைப்பதற்கு மதனன் நிறமாவின் முகையைவில்லில் நிறுத்துகின்றான் என்னே!

வி : தூஷகன் சிறிது பொறும்; இந்தத்தடியால் மதனனுடைய அம்பை அடித்து அழிக்கின்றேன். (தடியைத் தூக்கி மாம்பூவை அடிக்கப் போகின்றான்.)

அரசன் : (புன்சிரிப்பொடு) அஃதிருக்கட்டும், பார்ப்பானது வலிமை தெரிந்ததுதான். தோழனே! எந்த இடத்திலிருந்துகொண்டு என் காதலியைச் சிறிது ஒத்திருக்கும் பூங்கொடிகளைப் பார்த்து இன்புறலாம்?

விதூஷகன் : மல்லிகைப் பந்தரின்கீழ்ப் பொழுது போக்குவீர் என்றும், நும்மால் நுமது கையினாலேயே ஓவியப்பலகையில் எழுதப்பட்ட பெருமாட்டி சகுந்தலையின் ஓவியத்தை அவள் அங்கே கொண்டுவர வேண்டுமென்றும் நீர் முன்னமே தான் சதுரிகை என்னும் நும் ஏவற்காரிக்குச் சொல்லியிருக்கின்றீரே.

அரசன் : நெஞ்சத்தை உவப்பிக்கிறதற்கு அது நேர்த்தி யான இடந்தான். அதற்குப் போகும் வழியைக் காட்டு.

விதூஷகன் : வேந்தே! இவ்வழியே இவ்வழியே வருக. இருவரும் நடந்து போகின்றார்கள்; சானுமதியும் பின் போகின்றாள்.)

விதூஷகன் : இதோ! சலவைக்கல் லிருக்கை உடையதாய், மலர்களால் ஒப்பனைசெய்யப்பட்டு அழகாய்த் தோன்றும் இந்த மல்லிகைப் பந்தர் நம்மை உண்மையிலேயே மகிழ்ந்து வரவேற்பது போலத் தோன்றுகின்றது! இனி நீர் இதனுள்ளே புகுந்து அமரலாம்.

(இருவரும் புகுந்து இருக்கின்றனர்.)

சானுமதி : இந்தக் கொடியின் பக்கத்தே நின்று கொண்டு என் தோழியின் ஓவிய உருவத்தைக் காண்பேன். அதன்பின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/139&oldid=1577255" இலிருந்து மீள்விக்கப்பட்டது