உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

79

றோமாதலின் உள்பொருள் சூனியமாயிற்றாம். பிறவெனின் அறியாது கடாயினாய், மலைகடனாடு முதலிய அவயவ வுருவங்களால் தூலமாகக் காணப்படும் இக்காரியப் பிரபஞ்சத்தைத் தத்தஞ்சூக்கும முதற்காரணமாகிய பரமாணு ரூபங்களாகவும், அதிசூக்கும முதற்காரணமாகிய மாயை யாகவுந் திரித்தருளுகின்ற இறைவன் றிருவருண் முயற்சியே அங்ஙனஞ் சங்காரகிருத்தியமென்று ஓதப்பட்ட தல்லது உள்பொருளை இல்பொருளாக்குவதே அதுவாம் என்பதன்று. இங்ஙனங் காரியரூபமாகக் காணப்படும் பிரபஞ்சங் காரண ரூபமாய் ஒடுங்குதல் பற்றியே அறிவுடையோர் அதனை அநித்தியமென்று ஓதுவர். இதனை ஓரு தாரணமுகத்தானும் ளக்குவாம். குயவன்தன் மதி நுட்பத்தால் மண்ணைத் திரட்டிக் குழித்து வாய்குக்கி வயிறு பெருக்கிச் சுள்ளையி லிட்டுச் செவ்வண்ணமாக்கி எமக்கு ஒரு குடந்தந்தான். தர, அதனை யாம் நெடுநாள் உபயோகித்து வருகையில் அதுவுஞ் சிறிது சிறிதாகத் தெய்வுண்டு கடைசியிற் குடமென்பதொன்று இல்லையாக முடிந்தது. பொன் ஆபரணஞ் செய்தல் வல்லா னாருவன் யாம் தந்த பத்துக்கழஞ்சு பொன்னையுஞ் செவ்விய ஓராபரணமாக நிருமித்து எம் புதல்விக்குப் பூட்டினான். அவ்வாபரணத்தைச் சில வருடங்கழித்துக் கழற்றி நிறுத்துப் பார்த்தபோது அஃது எட்டுக்கழஞ்சுதான் நின்றது. பின்னுஞ் சில வருடங்கழித்து நிறுத்தபோது ஐந்து கழஞ்சுதான் நின்றது. பின்னும் இவ்வாறே நிறுத்து நிறுத்துப்பார்க்கக் குறைந்து கொண்டே போய்க் கடைசியில் ஆபரணமென்பதே ஒன்று இன்றாய் முடிந்தது. இனி ங்ஙனங்காட்டியகுடமும்

ஆபரணமும் இல்லையாய்ப்போன மாயந்தான் என்னை என்று ஒரு சிறுவனைக் கேட்பினும் அவன் தினைத் தினை யாகத் தேய்ந்து இறுதியில் அவையில்லையாயின வென்று மறுமொழி யுரைப்பான். இனித்தேய்தல் என்பதுதான் யாது என்று நுணுகியாராய்ந்து அவனைக் கேட்பினும் அச்சிறுவன் குடமாகவும் ஆபரணமாகவும் திரண்டெழுந்த மண்ணும் பொன்னுந் துகள் துகளாகப் பிரிந்து போயினவென்று அறிவுதோன்றக் கூறுவான். இனி அத்துகள்கள் தாம் எங்குச் சென்றனவென வினவின் அவன், அவை எங்குஞ் சென்றில சூக்கும அணுரூபமாக இங்கேதான் இருக்கின்றன என்றும் மொழிந்து எம்மை மகிழ்வித்திடுவான். ஆகவே, காரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/104&oldid=1574520" இலிருந்து மீள்விக்கப்பட்டது