உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

81

இனி, சங்கராச்சாரியர் வேதாந்தசூத்திர வுரையிே பிரமம் ஒன்றே உள்ளதென்றும் அதற்கு வேறாக ஒரு பொருளில்லை என்றும், காணப்படுகின்ற இந்த வுலகங் களெல்லாம் மெய்யான அப்பிரமத்திலே பொய்யாகத் தோன்றும் பொய்த் தோற்றங்களே யாமென்றும் தமக்கு வேண்டியவாறேயுரைத்தார். இது பொருந்தாமை காட்டு வாம். யாம் அறிவு விளங்கப்பெறாதுகிடந்த குழந்தைப் பருவந் தொட்டு இதுகாறும் இவ்வுலகத்தோடு சம்பந்தமுறு கின்ற நெறியாலே சிறிது சிறிதாக கூறிவருகின்றேம். காணப்படும் இவ்வுலகியற் பொருளின்கட் பழகி முதிர்ச்சியடைகின்ற அறிவின் வல்லமையாற் காணப்படாத கடவுள் ஒருவன் உண்டென்றும் அனுமானஞ் செய்து போதருகின்றோம். என்னை? அனுமான வுணர்வெல்லாம் பிரத்தியக்க வுணர்வின் வழி நிகழ்வனவாகலான்; உண்டி சமைக்கின்ற அறையிலே டி தீமூட்டக்கண்டு புறம்போந்து மேல் நோக்கியவழிப் புகை செல்லுதலைப் பன்னாட் கண்டிருந்தான் ஒருவன் தான் வேறு

ஓர்

L

ஊர்க்குப் போம் நெறியில் ஒரு கூறையின் மேற் புகைசெல்லக்கண்டு ஆண்டு அதன் கீழ் நெருப்புண்டென்று முன்னை யறிவொடு சார்த்தியளந்துணர் வானாவது. இவ்வாறு தீமூட்டுந்தோறெல்லாம் புகையுண் டாதலை முன்னறியாதான் பின்னொருகாலத்துத் தான் கண்ட புகையினாற் றீயுண் டென்று அறியுமாறு யாங்ஙனம்? ஒன்றை மற்றொன்றோடு ஒப்பிட்டுக் காண்டலானும் ஒன்றைப் பிறிதொன்றின் வேறாகக் காண்டலானும் மக்களெல்லாம் அறிவுடையராகின்றா ரென்பது தருக்கநூலார்க் கெல்லாம் உடன்பாடாம். இங்ஙனங் காணப்படும் உலகத்தாற் காணப்படாத கடவுளை யுணர்தல் வேண்டுமென்பது பற்றியே தெய்வப்புலமைத் திருவள்ளுவ னாரும் “ஆதிபகவன் முதற்றே யுலகு” என்று உலகின்மேல் வைத்துக் கூறினார். இனி உலகமே பொய்யாய் ஒழிந்தவழி, அவ்வுலகின் மேல் வைத்து உணரப் படுவதாகிய பிரமமும் பொய்யாய் ஒழிந்திடுமாகலாற் பிரமம் மாத்திரம் உள் பொருளாய் நிலையுமென்று அவருரைத் தவாதம் போலியா யொழியும் அல்லதூஉம், காணப்படாத அருவ மாகிய பிரம்மத்தின் கண்ணே உருவமாகிய இப்பிரபஞ்ச வேறு பாடுகளையெல்லாங் காணுமாறு யாங்ஙனம்? அல்லதூஉம், பிரமத்தைத்தவிர வேறு இரண்டாம் ஒரு பொருளில்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/106&oldid=1574522" இலிருந்து மீள்விக்கப்பட்டது