உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

மறைமலையம் - 8

L

யாயின் அப்பிரமத்தின் கண்ணே அவ்வாறு காண்பான் தான்யார்? இவ்வாறு எழூஉம் பல்வகை யாசங்கைகளாற் சங்கராசாரியார் உரைப்பொருள் ஒரு வாற்றானும் பொருந்தா தென்பது இனிது விளங்கலானும், அவருரை, பிரத்தியக்க மாகக் கண்டறியப்பட்டு எல்லாரானுந் தழீஇக்கொள்ளப் படும் பௌதிக சாத்திரப்பொருளோடு இணங்காமன் மாறுகொண் டழிதலானும் சங்கரா சாரியாரைப்போலவே பிரமத்தைத்தவிர மற்றொழிந்த பொருளெல்லாம் பொய்யாமென்றுரைத்த கான்ட், ஈகிள், பிநோஸா முதலான ஐரோப்பிய வித்துவான் களின்கோட்பாடெல்லாம் பௌதிகசாத்திர வுண்மைப் பொருளோடு ஒற்றுமையுறுதலின்றிப் பொய்படுகின்றன வென்று அவையெல்லாம் நன்றாராய்ச்சிசெய்து நூலெழுதிய குரூம்பராபர்ட்சன் என்னுமாங்கில தத்துவசாத்திரியார் உண்மைதோன்ற நிலையிட்டு உரைத்தலானும் உலகம் பொய்யென்று அங்ஙனங் கூறுவாருரை பொய்யாமென்று மறுக்க.

இனி, இங்ஙனம் சூனியத்தினின்று உலகைச் சிருட்டித்தான் என்றும், இறைவனே உலகமாய்த் தோன்றினா னென்றும், இறைவன்கண் இவ்வுலகமும் பிறவுமெல்லாம் அத்தியாசமாகத் தோன்றும் பொய்ப் பொருள்களா மென்றுங் கூறுஞ் சமயிகள் உரை தத்துவசாத்திரந் தருக்கசாத்திரம் பௌதிகசாத்திர முதலியவற்றி னுண்மைப்பொருளோடு ஒற்றுமைப்டாமை யான், அச்சமயிகளெல்லாம் சமய சாத்திரத்தொடு தத்துவ சாத்திரந் தருக்கசாத்திரம் பௌதிகசாத்திரம் முதலியவற்றின் பொருளியையா, மற்று அவை ஒவ்வொன்றுந் தத்தம் நிலையிற் பிரமாணமாம், இந்நான்கனையும் ஒன்று சேர்த்து இணக்கி யாராய்தல் பொருந்தாதென்று தமக்குத் தோன்றியவாறே கூறி இழுக்குறுகின்றார். யாதாயினும் ஒரு சமயம் மெய்ச்சமய மானால் அச்சமயப் பொருள் எல்லாச்சாத்திர வுண்மைப் பெருளோடும் ஒருமையுற்றுப் பிரமாணமாய் ஒன்று உண்டோ வெனின்; உண்டு. அதுதான் சித்தாந்தசைவ சமயமாம். யாங்ஙனமோ வெனிற் காட்டுதும், ஆசிரியர் மெய்கண்ட தேவநாயனார், சிவஞானபோதத்தில் ஈசுர நிச்சயம் பண்ணுகின்ற முதற்சூத்திரத்திலே உலகாய தசமயியை மறுத்துத் "தோற்றமும் ஈறும் உள்ளதன்பாலே கிடத்தலின்” என்று

66

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/107&oldid=1574523" இலிருந்து மீள்விக்கப்பட்டது