உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

ஞானசாகரம்

83

என

லகத்தை எக்காலத்தும் உள்பொரு ளென்றே நிலையிட்டு உரைத்தலானும், உலகம் இல் பொருளாய்ச் சூனியத்தினின்றே தோன்றி நின்று அழியுமெனக் கூறும் புத்தரை மறுத்து உலகமுள்ளது, இல்லதற்குத் தோற்றமின்மையின் வைத்துச் சித்தாந்தப்படுத்திக் கூறலானும் பிறவாற்றானும் என்பது. இவ்வாறே சித்தாந்தசைவம் போதிக்குஞ் சிவஞான போதத்தின்கட் போந்த மெய்ப்பொருள்களெல்லாம் ஏனைத் தத்துவசாத்திர தருக்கசாத்திர பௌதிகசாத்திர உண்மைப் பொருளோடொ ா ருமையுற்று இணங்கி மற்றைச்சமய முடிபொருட்கெல்லாஞ் சிரத்தானமாய் அமர்ந்தி ருக்குந் தெய்வப்பெற்றிமை தேறவல்லார்க்கு மெய்யாக நிலைபெறுஞ் சமயமொன்று ஏனை நன்பொருணூல்களோடு மாறுபாடு றுதல் ஒரு சிறிதுமில்லை யென்பது இனிது விளங்கும். இன்னுஞ் சமயநேரும்போ தெல்லாஞ் சைவசித்தாந்தப் பொருளொன்று மே ஏனை உண்மைப்பொருணூல்களோடு இணங்குமாறும், மற்றைச் சமயப்பொருள்கள் அவ்வாறு ணங்காமையும் முறையே தந்து காட்டுவாம்.

திருச்சிற்றம்பலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/108&oldid=1574524" இலிருந்து மீள்விக்கப்பட்டது