உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

6. சந்தானகுரவர் வரலாறு

செந்தமிழுலகமுய்யத்

திருவவதாரஞ்

செய்தருளிய சைவசமயகுரவருள் ஆளுடையவரசுகள் ஆளுடைய நம்பிகள் திருவவதாரஞ் செய்தருளிய நடுநாட்டின்கண் திருப்பெண்ணாக டத்திலே வேளாளர்குலத்திலே அச்சுதகளப்பாளரென்பா ரொருவரிருந் தனர். அவர் எல்லாப்பேற்றினை யுடையராயினும் புத்திரப் பேறில்லாராகிப் பெரிதுங் கவலெய்தித் தங்குலகுரு வாகிய சகலாகமபண்டிதரைச் சென்றணைந்து ஐயா! யான் பெறாப்பே றொன்றுமிலது, 'பெறுமவற்றுள் யாமறிவதில்லை யறிவறிந்த மக்கட்பேறல்லபிற' என்றபடியான் மக்கட்பேறில் லேனாயினேன், அறத்தாற்றினில் வாழ்க்கையாற்றுவார் இறுக் கற்பாலவாய கடன் மூன்றனுள் தென்புலத்தார்கடன் சிறந்த தாமன்றே! என் செய்வல்! எனக்கரைந்த வரடிக்கீழ் நெடும்பனை போல் வீழ்ந்துபணிந்தனர். அவர் பெரிது மாய்ந்து நாஞ்செயத் தக்கதியாதென் றொருவாறு தேர்ந்து திருநெறித்தமிழ் வேதமாகிய ஆளுடைய பிள்ளையார் திருவாய் மலர்ந்தருளிய தேவாரத்திருவருள் முறையிற் கயிறு சாத்தக் “கண்காட்டு நுதலானும்” என்னுந் திருப்பதி கத்திலே"பேயடையாவிரி வெய்தும் பிள்ளையினோடுள்ள நினை வாயினவே வரம் பெறுவரை யுறவேண்டா வொன்றும் வேயனதோளுமைபங்கன் வண்காட்டு முக்குளநீர் தோய்வினையா ரவர் தம்மைத் தோயாவாந் தீவினையே” என்னுந் திருப்பனுவலுதயமாக வதன் செம்பொருளை நனிபெரிதும் விளக்கினர்.

அச்சுதகளப்பாளர் அத்திரவிடவேதச் செம்பொருளைக் கேட்டாங்குக் கழி பேருவகைகொளீஇக் கற்பினருந்ததியன்ன தன் காதலியோடு நாற்கோட் டும்பனம்பனைவழிபடும் சுவேதவன மெனும் வடமொழிப்பெயரிய திருவெண்காடெய்தி முச்சுடர்த் தீர்த்தமெனப்படுந் திருமுக்குளத்துறையி னீராடித் தருப்பித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/109&oldid=1574525" இலிருந்து மீள்விக்கப்பட்டது