உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

85

நியமங்கள் பலசெய்து நிகமாகமங்களனைத்தும் பரப்பிரமப் பொருளெனத் துணிந்தகுணா தீதப்பொருளையும் அவனொடும் பிரியாமடமயிலையும் வழிபாடுசெய்து வந்தனர். இவரிவ்வா றியற்றி வருஞான்று மரகதவல்லி பங்கராகிய சிவபிரான் ஒரு நாள் அவர் சொப்பனத்தின்கண்ணே தோன்றி, "மைந்த! நீ நீ கவலொழி, நினக்கு இத்தமிழுலகமுய்யும் வண்ணம் ஆளுடைய பிள்ளையாரென் றியாவருங்கருதவும் திராவிட சுருதிச் செம்பொருளைத் தன்னகத்தடங்கிய சைவசித்தாந்த சாத்திரத்தை வெளிப்படுத்தவும் சித்தாந்த தாபனஞ்செய்யவு மொருமகவைத் தருகின்றேம், அவன் ஆசிரியத்தலைமையெய்திச் சிறப்பனென்றே கூறித்” தம் முருக்க ரந்தனர். பின்னர்ச் சிலநாளில் அச்சு தகளப்பாளர் என்றும் போலத் தடாக கருமங்களை முடித்துக் கரையேறுகின்றவளவிலே, ஓரருமைக்குழவி அழுத வண்ண மாய்க் கிடப்ப இது பெருமான் அருளிச்செய்த தாகுமெனக் கொண்டு போந்து மகிழ்ச்சி யுடன் மனைவிகையிற் கொடுத்து இம்மகவு வெண்காட்டடிகளாற் பெற்ற பெறலரும் பேறாகலின் சுவேதவனப் பெருமாளென நாமகரணஞ்செய்து அங்கு நின்றும்போந்து திருப்பெண்ணாகடமடைந்தனர்

இவர் காதலியோடுடன் பிறந்தார் இதனைக் கேள்வியுற் றாங்கடைந்து அம்மகவைத் தம்மனையகம் முன்னைஞான்று பிரமவிருடியாகிய வசிஷ்டமுனிவர் வியாக்கிரபாதமுனிவர் புத்திரராகிய உபமன்னுயுபகவானைக் கொணர்ந்து வளர்த்தது போன்று கொணர்ந்து தொட்டிலிலிட்டுத் தம்பதியாகிய திருவெண்ணெய் நல்லூரிலேயே வளர்த்து வந்தனர். இவர்க்கு மூன்றகவை நிரம்புமுன்னரேதாம் சாமுசித்தராதலின் மெய் யுணர்வுதலைக்கூடத் திருக்கயிலாய பரம்பரையில் நந்தி பெருமான்பாற் சித்தாந்த நெறியுபதேசம்பெற்ற சனற்குமார வடிகள் மாணாக்கராகிய பரஞ்சோதி முனிவர் தென்மலையத் தருந்தவரைக் காணுமாறுகருதிக் கயிலையை நீங்கி விண்வழிப் படர்ந்து காசிமுதலிய பலதலங்களையுந் தரிசித்துத் திரு வெண்ணெய் நல்லூரையணுகி நம்மடிகளிருந்த மனையகத்தின் வழியேபோத இவர்க்குக் கமனகுளிகைசெல்லுகை தவிர்ப்பக் கண்டு ஈண்டோர திசயமிருப்ப தென்னெயோ வென்றிறங்கிப் பார்த்துழி மணலிற் சிவலிங்கமியற்றி விளையாடல் புரிந்து இறைவனையே நாடியிருந்த அருமந்தமகவைக்கண்டு அவர்க்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/110&oldid=1574526" இலிருந்து மீள்விக்கப்பட்டது