உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

மறைமலையம் -8 8

தச்ணாமூர்த்தியாகிய பெருமான் றிருக்கரத்திற் பன்னிரு சூத்திரவடிவினதாகிச் செறிந்த சிவஞானபோதத்தை அற்றை ஞான்று போதவூர்நாடிய புண்ணியப் பெருந்தகையாம் வாதவூரர் அடிகட்கு வடவானிழலொரீஇத் திருப்பெருந்துறையிற் குருந்தின் நீழலிற் குருமணியருளுபதேசஞ்செய்தாங்கு அம் மெய்யுணர்ச்சி யுடையார்க்குப் பொய்கண்டகன்ற மெய் கண்டதேவனேனத் திருநாமஞ் சாத்தியருளுபதேசஞ்செய்து கடைக்கணீந்தருளி நும்மையடைவார்க்குப் பரிபாகம் வந்தவாறே யுபதேசஞ்செய்க வென்றருளிச்சென்றனர்.

6

இவர் அச்சித்தாந்தோபதேசம் பெற்றவுடனே அச்சிவ ஞான போதத்தினுபதேசப் பொருளைக்கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து தமக்காசங்கை யெழுந்தவிடத்துப் பொல்லாப் பிள்ளையா ரருளிச்செய்த சூர்ணிக்கொத்தாற் றடைதீர்ந்து தென்றமிழுலக முய்ய அதனை வார்த்திகப் பொழிப்புடன் தம்மையடைந்த அதிபக்குவர்க்குபதேசித்துக்கொண்டுவந்தனர். இவ்வாறு நிகழ்கையில் அங்குத் தம்மாணாக்கர்பாலடைந்த தங்குலகுரு வாகிய சமகலாக பண்டிதர்மெய்கண்ட தேவர்தம்மை யடைந்த அதிபக்குவர்க்கெல்லாம் சித்தாந்தநிலைமையை யுபதேசித்து வருவது கேட்டறிந்து அவர் தம்முழைவாராமை கண்டு தாமேசென்று காணச்செருக்குடன் சென்றனர். தேசி கேசாகிய மெய்கண்டதேவர் பதி பசு பாசமென்னுந்திரி பதார்த் தத்துள் பாசபதார்த்தமாகிய ஆணவமல் முதலிய பஞ்ச பாச விலக்கணங்கூறி மேற்கண்டவர்கட் கவ்வாணவ விலக்கணத்தை வருவாரைச் சுட்டிக் காட்டி அஃதின்னதா மெனக் குறித்தனர். அதையுணர்ந்த சகலாகமபண்டிதர் ஒன்றுமுரை யாடாது தேசிகர் திருநோக்கத்தானே அதி தீவிரபக்குவமெய்தி அழலதுகண்ட மெழுகெனக்குழைந்துருகியடியற்ற பனைபோல் வீழ்ந்து யாமுய்ய வெழுந்தருளிய தம்பிரானே! யன வாழ்த்திநின்றனர். தேசிகேசரும் அவரை யுமாட்கொண்டருளிச் சிவஞான போதத்தின் மொழிபெயர்ப் பினை யுபதேசித்தனுக் கிரகஞ் செய்தனர். இவர் இதன்பொருள் செவ்விதின் விளங்கப் பரபக்கந்தடைவிடைகளாற் பரிகரித்துச் சுபக்கமாகிய சித்தாந்த மெனப்படுஞ் சிவஞான போதத்தினுக்கு வழி நூலாகப் “பார்விரித்த நூலெல்லாம் பார்ததறியச் சித்தியிலே யோர் விருத்தப்பாதி போதும்” என்றும். "பாதி விருத்தத்தாலிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/111&oldid=1574527" இலிருந்து மீள்விக்கப்பட்டது