உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

87

பார்விருத்தமாக வுண்மைசாதித்தார்” என்றும், “சிவனுக்கு மேற்றெய்வமில்லை, சித்திக்கு மேற் சாத்திர மில்லை” என்றும் "வள்ளுவரன்பர்மொழி வாசகந் தொல் காப்பியமே தெள்ளுபரி மேலழகர்செய்தவுரை யொள்ளியசீர்த் தொண்டர் புராணந் தாகைச்சித்தி யோராறுந் தண்டமிழின் மேலாந்தரம்”என்றும் அபியுத்தர்களெல்லாங்கூறத் திருவாய் மலர்ந்தருளித் தேசிகேசர் சந்நிதிக்கண் அறிவிக்க அதனைக் கடைக்கணித்தருளி அவருக்கு அருணந்தியென்னுந் தீக்ஷா நாமம்புனையவே அவர்மேல் தோத்திரமாகச் சாத்திரப் பொருளடங்கிய இருபா விருபஃ தென்னுமொருநூலையும் செய்தருளினர்.

திருமயிலை

பின்னும் வரும் சண்முகப்பிள்ளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/112&oldid=1574528" இலிருந்து மீள்விக்கப்பட்டது