உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

மறைமலையம் 8

– 8

7. சகளோபாசனை

இவ்வாறு இகழ்வதோ? என்று வருந்திக் கூற, அப்போது ஞானசம்பந்தப்பெருமானார் அரசியாரைப்பார்த்து.

“மானினேர்விழி மாதராய்வழுதிக்குமா பெருந்தேவிகேள் பானல்வாயொருபாலனீங்கிவனென்று நீபரிவெய்திடே லானைமாமலையாதியாயவிடங்களிற்பலவல்லல்சே ரீனர்கட்கெளியேனலேன்றிருவாலவாயரனிற்கவே"

என்னுந் திருப்பதிகங் கட்டளையிட்டருளினார். இதன் கண் ஞானசம்பந்தப்பிள்ளையார் மங்கையர்க்கரசியாரை நோக்கிப் "பால்மணக்கும் நல்வாயையுடைய பாலன் நானென்று அம்மே! நீவருந்தாதே” என்று உரைத்தருளினாரென்பது பெறப்படுதலால், அவர் பாண்டி நாட்டிற்குச்சென்று சமணரொடு வாது செய்தகாலத்திலேயே பாலறாவாயராகவே யிருந்தாரெனல் தெற்றெனவிளங்கும். இங்ஙனம் பிள்ளையார் மதுரை மாநகரி லிருக்கின்ற காலத்தே அவர்க்கு நான்கு அல்லது நாலரைவயது தான் சென்றதென்பதற்கு அவர் தம்மைப் ‘பால்மணக்கும் நல்வாயர்' எனக்கூறுதலே சான்று ரைக்கும். இனிப்பெரிய புராணத்தின்கண் ஓதப்பட்டமெய் வரலாறு ஒருசிறிது ஆராய்ந்து செல்வார்க்கும், மதுரை மாநகர்க்குச் செல்லுமுன்னரே பிள்ளையார் தெய்வப்பெற்றி யுடையராய்ச் சிவதலங் கடோறுஞ் சென்று திருப்பதிகங் கட்டளை யிட்டருளிச் செய்த காலம் ஒன்று அல்லது ஒன்றரை வருடமா கலாமென்பது விளங்கும். ஆகவே, பிள்ளையார் சிவபெருமான் றாங்கி வந்த சகளமங்கள அருட்கோலத்தை நேரே கண்டு அக்கோலத்தாற்றாம் அனுக்கிரகிக்கப் பட்டகாலம் தமக்கு மூன்று வயது செல்கின்ற பருவத்திலே யாமென்று பெரிய புராணங்கூறிய உண்மை வரலாறு மேன்மேல் உரங்கொண்டு திகழுமாறுகாண்க. இங்ஙனந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/113&oldid=1574529" இலிருந்து மீள்விக்கப்பட்டது