உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

89

தருக்கநூற் பொரு ளொடுபடுத்து யாம் இனிதெடுத்து விவகரித்த வாத வொழுங்கின் முடி பொருளாய்ப் பிள்ளையார் தாம் மூன்று வயதுசெல்கின்ற அக் காலத்திலேதான் இறைவனும் இறைவியும் ஒருங்கெழுந்து வந்த அருட்கருணைத் திருக்கோலத் தை நேரே கண்டுபின் அவரால் அனுக்கிரகிக்கப்பட்டாரென்பது நன்று பெறப்பட்டதாகலின், அதுபற்றி யாம் நிறுவப்புகுந்த சகளமங்கள வருட் கோல வியல்பு துர்ப்பலமாய் விடுமென்று நீர் கூறியது போலி

யுரையே யாமென்று துணிக. இன்னும்

'தோடுடையசெவி' எனக் கண்ணினாற் காணப்படும் உருவமும், 'பால்கறந்தூட்டுக' என்னுஞ் செவியினாற்கேட்கப்படும்

ஓசையும், மூக்கினாற் கவரப்படுந்திவ்விய பான்மணமும், வாயினாற் சுவைக்கப்படும் பாலும், அம்மையப்பரால் தொடப்படும் பரிசமுமுடைய அச்சகளமங்கள அருட்கோலங்கள் மெய்ப்பேறுடையவா மென்பது நன்று நிறுவப்பட்டது. இங்ஙனம் உலகானுபவ வுணரச்சியும் அதனாற்பாவனை செய்யுஞ்சக்தியும் வாய்ப்பப் பெறாத குழந்தைப்பருவத்திலே ஞானசம்பந்தப்பிள்ளையார் மதிமுகிழ் பிணித்த மாதியல் பாகனை நேரேகண்டு அனுக்கிர கிக்கப்பட்டுத் திருப்பதி கங்கட்டளையிட்டருளிய அற்புத நிகழ்ச்சியைத் தேசசரிதவுணர்வு பிறழாது உண்மையான் ஆழ்ந்தாராய்ச்சி செய்யவல்ல எந்த நிரீசுரவாதிதாம் பொய் யென்று மறுக்கமுந்திடுவார்? மக்களுக்கு அமைந்த மூளையின் சக்தியால் அதிவிசித்திர கருமங்களும் எளிதில் நிகழ்த்தப்படும் என்று தமக்குத் தோன்றியவாறெல்லாம் ஆகாயக் கோட்டை கட்டி அதன் கண் நின்று பிறரை அறைகூவி யாரவாரஞ்செய்யும் மனோதத்துவநூலார் தாம் பிள்ளையார் சரிதத்தின்கண் யாதுசொல்லவல்லார்? சரிதவியல்பொடு மாறுகோளுறாது நிகழ்ந்த இவ்வற்புதப்பெற்றியை அற்புதமே ஒன்றில்லை யெனக்கூறும் பிரமசமாசத்தார் தாம் எவ்வாறு கடந்து விவகரிப்பார்? இது நிற்க.

இனிப்பிரமசமாசத்தார் உலகவியற்கைக்கு வேறாக அற்புதமென ஒன்று நிகழுமாறில்லை யெனக்கிளந்துரையாடி ஆரவாரஞ்செய்தலின் அவருரைப்பெற்றி ஒரு சிறிது ஆராய்ந்து போலியாமாறுகாட்டிப் பின் எடுத்துக்கொண்டு விஷயத்தின் கட்செல்வாம்.

அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/114&oldid=1574530" இலிருந்து மீள்விக்கப்பட்டது