உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

மறைமலையம் லயம் – 8

பிரமசமாசத்தார் கூறுமாறு: வித்தினின்று முளை கிளம்பிப் பின் பலவருடஞ்சென்று மரனாதலும், ஒருதாய்க் கருப்பையுற்கருமுதிர்ந்து பத்துமாதங்கழியப் பிறந்து வளர்தலும், வளர்ந்தன ஒருகாலத்து இறந்தொழிதலும், பிருதிவி அப்புத் தேயுவாயு ஆகாயம் முதலியவுலகியற்பொருள்கள் தத்தம் நிலையிற் பிறழாது நின்று இயங்குதலும் பிறவுமாகிய தொழிற் பாடுகளெல்லாம் இயல்பாகவருவனவாம்; இவற்றை இங்ஙனம் வகுத்தமைத்து நெறிபிறழாது நடாத்துகின்றவனாகிய முழு முதற்கடவுள் அவற்றினியல்பைப் பிறிதோர் காலத்து மறுத்து மாற்றினா னென்றல் அவனுடைய இறைமைக் குணத்திற்குப் பொருந்தாமை யான், உலகவியல்போடு மாறுபாடு பெரிதுற்று நிகழ்வதா மென்று ஒருசில சமயவாதிகள் கூறும் அற்புதவியல் பொய்யாம் என்பர்.இதனை விசாரிப்பாம்.

ஏனைச்சமய

கு

நூல்களிலும்

இனித் தேசசரிதவுணர்ச்சிமிகவுடையார்க்கு இங்ஙனம் நடந்த அற்புத நிகழ்ச்சிகளைப்பொய்யென்று மறுத்தலாகாமை யான், இவ்வற்புதங்கட்கு வேறு கதிகற்பியாமல் வாளாதமக்குத் தோன்றியவாறே பொய்யென்று உரைத்தன் முறையாகாது. அல்லதூஉம், அவ்வற்புதங்கடாம் ஒருகாலத்து ஒருதேயத்தில் நிகழ்வதன்றி, எக்காலத்தும் எல்லாத் தேயத்தின்கண்ணும் நிகழா நிற்கின்றன. ஏசுநாதர் ஒரு சில அப்பங்களையும் மீன்களையும் பெருந்திரளான மக்கட்கு விருந்தளித்தாரெனவும், அத்திமரத்தை வற்றச்செய்தாரெனவும், இறந்தவனை எழுப்பினாரெனவும், காண்கிறோம். இவ்வாரிய கண்டங்களிற் பரஞானமுதிர்ச்சி கைவந்தவராகிய சீவன் முத்தர் பலவேறு அற்புதங்கள் நிகழ்த்தியவாறு போலவே அநாரிய கண்டங்களில் அபரஞானசித்தியுடையரான தீர்க்கதரிசி மார்தோன்றிப் பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்தக்காண்டலால் இவையனைத்திற்கும் ஒருகதிகற்பிக்க அறியாமல் அவை யெல்லாம் பொய்யாமென்றுரைப்பார் கூற்று வெறுங்கூற்றா வதன்றிப்பிறிதென்னை? எம்மறிவுக்குப் பொருந்தவில்லை என்றும் எம்மனுபவத்திற்கு அஃது இயையவில்லை யென்றும் உரைத்து அத்தனை எளிதாக அவற்றைப்பொய்யென்றுரைப்பார் வேறு என் கடவரென்க. இக் காலத்தில், நீராவியந்திரங்களின் சகாயத்தாலும், மின்சார யந்திரங்களின் சகாயத்தாலும் அற்புத கரமான பலபொருள்களும், பலதொழிற்கூறுபாடுகளும் செய்யப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/115&oldid=1574531" இலிருந்து மீள்விக்கப்பட்டது