உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

91

படுதல் காண்கின்றோம். இவையெல்லாம் ஓர் ஐந்நூறு வருடங்கட்கு முன்னிருந்த எம்முதுமக்கள் கனவினுங்கண்டறியார். அவர்காலத்தில் ஒருவர் தோன்றிப் பின்னொரு காலத்தில் நீராவியந்திரங்களும் மின்சாரயந்திரங்களும் ஏற்பட்டு அருமை யான பலகாரியங்கள் செய்யுமென்று உரைப்பின் அதனைக் கேட்ட ஒரு சிலர் அதுபேரற்புதமாயிருக்குமெனவும், வேறு சிலர் அஃது உலகவியற்கைக்கு மாறாகலின் அவ்வாறு நிகழாது எனவும் வேறு சிலர் எந்தக்கருமமுஞ் செய்கின்றவன் ஆற்றல் பற்றி நிகழ்வ தாகலின் பின் உற்பத்தியாகும் அறிவுநுட்பவாற்றல் மிக்குடையரான மக்கள் அது செய்தற்கு முரியராவரெனவும் ரைத்துத் தம் அபிப்பிராயம் மொழிந்திடுவார். இனி இவ்வியந் திரங்களின் சகாயத்தை நேரேயனுபவிக்கும் எமக்கெல்லாம் அங்ஙனங் ஆச்சரியம் நிகழ்த்தலின்றாய்ச் சாதாரணமாயிருக் கின்றது. இவ்வாறே, செம்பைப்பொன்னாக்கும் இரசவாதம் பொய்யா மென்று சொல்லிக்கொண்டிருந்த பௌதிகசாத்திரி களும் இப்போது அமெரிக்காதேசத்தில் ஒருவர் செம்பைப் பொன்னாகத்திரித்து விற்றலைக்கண்டு அதனையும் உம்மை யாமென நம்புதற்குத்தலைப்பட்டு விட்டார்கள். மந்திர வொலிகட்கு வடிவமுண்டென்று சைசித்தாந்திகள் சொல்வதை மறுத்தோர் சிலர், அமெரிக்காவில் ஓரரிய தத்துவசாத்திரியார் ஒலிநுட்பங்கட்கெல்லாம்வடிவுண்டென்பதைப்பிரத்தியக்கமாக நிரூபணஞ் செய்தலையறிந்து அதனையும் நம்பத்தலைப்பட்டு ட்டார்கள். மின்சாரத்தந்தியின்றி மின்சாரம் இயங்கமாட்டா தென்று சொல்லிக்கொண்டிருந்த ஐரோப்பியசாத்திரிகள் எல்லாரும், எம்முடைய ஆரியகண்டத்தின் மிக்க நுட்பபுத்தி மானாகிய போஸ் என்னும் வங்காளக்கனவான் புதுவதாகக் கண்டுபிடித்த முறையால் தந்தியின்றியும் மின்சாரமியங்கச் செய்யலாம் என்று தழுவிக்கொண்டார்கள். இவ்வாறே இக்காலத்திற் புத்திநுட்பத்தாற் பேராற்றலுடையரான நன்மக்கள் பலர் தோன்றி முற்காலத்திற் கனவுகாண்டற்கும் அரியவாய்க் கிடந்த அரும்பேரற்புத காரியங்களை இயற்று கின்றார். இங்ஙனம் இவர் பிரத்தியக்கமாகச் செய்துகாட்டுஞ் செயற்கரிய காரியங்களையெல்லாம் நேரேகண்டு வைத்தும், தம்முடைய அறிவுக்குந் தம்முடைய அனுபவத்திற்கும் பொருந்த வில்லை யென்று அவற்றையெல்லாம் பொய்யென்றல் பேதைநீரார் செயலேயாமென்று ஒழிக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/116&oldid=1574532" இலிருந்து மீள்விக்கப்பட்டது