உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

மறைமலையம் -8

இனிப்பெரியோர் நிகழ்த்திய அற்புதங்கள் உலக வியற்கைக்கு மாறுபாடுறுதல் இல்லை யென்பதூஉம் ஒரு சிறிது காட்டுவாம்.ஞானசம்பந்தப்பிள்ளையார் திருமயிலாப்பூருக்கு எழுந்தருளின காலத்தே, சிவநேசர் என்பார் ஒருவர் வளர்த்த அரியபெண்பாம்புகடித்திறக்க, அப்பெண்ணின் தந்தை யாரானவர் அவ்வுடம்பைத் தீயிலிட்டுக் கொளுத்தி எலும்பு களையெல்லாம் ஒரு குடத்திற்பெய்து பொதிந்து பிள்ளையார் திருமுன்பே கொண்டுவந்து அவர்க்கு அர்ப்பணஞ்செய்து ‘அருமையாக வளர்க்கப்பட்ட பூம்பாவை என்னும் என் மகள் இறந்தாளாயினும் சுவாமிகளுக்கே அர்ப்பணஞ் செய்துவிடல் வேண்டுமென்னுங் கடப்பாட்டால் அவள் எலும்பைத் திருவடிக்கு உறையாக உய்த்தேன்’என்று நெஞ்சங்கரைய மொழிதலும், பிள்ளையாரும் அவ்வன்பர்க்கு மிக இரங்கிக் கபாலீசுரர் திருவாலயத்துட் புகுந்து அக்குடத்தையுஞ் சந்நிதியில் இருத்தி,

“மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தா னொட்டிட்ட பண்பி னுருத்திரப் பல்கணத்தார்க் கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்”

என்னுந் திருப்பதிகங்

கட்டளையிட்டருளினார்.

அருளலும், எலும்பாய்க்கிடந்த அப்பிண்டம் எழுவகைத் தாதுக்களுங்கூடித் திரண்டுருண்டு அழகிய பெண்வடிவாய்க் குடத்தினின்றும் எழுந்தது. இவ்வற்புதம் உலகவியற்கையோடு ணங்குமாறு காட்டுவாம். அப்பெண்ணின் தேகம் அழிந்தது என்பதனாற் பெறப்பட்ட உண்மையாது? என ஒருங்கி ஆராய லுறுவார்க்கு, எழுவகைத்தாதுக்களாற் கட்டப்பட்டுத் தூல மாகக் காணப்படுந்தேகந் தத்தஞ்சூக்கும அணுரூபங்களாகப் பிரிந்து கட்புலனாகாது ஒழிந்தது எனத்தெளிவாய் விளங்கும். இங்ஙனந் தத்தஞ் சூக்கும அணுக்களாகப் பிரித்தற்கு நிமித்த காரணனான ஒருவனுடைய தொழில் இன்றியமையாததாம். அங்ஙனமே, எழுவகைத் தாதுக்களையும் ஒருங்குகூட்டுதற்கும் நிமித்தகாரணன் ஒருவன் வேண்டப்படும். அந்நிமித்த காரணன் றான் எல்லாம் வல்ல முழுமுதற்பெருங்கடவுளான ஈசுரன் ஒருவனேயாம். எவ்வாறு நிமித்த காரணனான குயவன் தன் சக்திக்கேற்பச் சிறிது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/117&oldid=1574533" இலிருந்து மீள்விக்கப்பட்டது