உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

93

சிறிதாக மண்ணைக்கூட்டிக் குடந் திரட்டு கின்றானோ அவ்வாறே எல்லாம்வல்ல முதல்வன் தன் பேராற்றற் கேற்ப அளவிறந்த அண்டங்களையும் அவ்வண்டங் களிற் பலவேறு வகைப்பட்ட ஆன்ம சரீரங்களையும் படைத்திட்டு ஆன்மாக் களுக்குப் போகம் நுகர்விக்கின்றான். இங்ஙனஞ் செய்கின்ற றைவன் எல்லாந்தன் சுதந்திர முழுமுதலறிவாற்றல் பற்றியே செய்வ தல்லது, எம்மைப்போலப் பரதந்திரவயத்தனாய் நின்று செய்வானல்லன். அவனுடைய கருணைக்கும் செயலுக் கும் அளவில்லை. அவ்வியல்பினனாகிய இறைவன் றிருவருட் சக்தி பதியப்பெற்ற ஞானசம்பந்தப் பிள்ளையார், பூம்பாவை என்னும் பெண்மகள் சரீரம் சூக்கும அணுரூபங்களாகப் பிரிந்தழிய அங்ஙனம் அழிந்தவதனைத் திரும்பவும் முன்னைத் தூலசரீர மாம்படி இறைவன் றிருவருட்சக்தி கொண்டு செய்வித்திட்டார். அற்றேல் ஒருதாய் அகட்டிற் கருவை உற்பத்திசெய்து அதனைச் சிலகாலத்திற் புறம்படுத்தி வளர்த்து அழிக்கின்ற ஈசுரன் றிருவருட்செயல் அச்செயன் முறைதிறம்பி, இடையொரு காலத்து அழிந்ததோர் உருவைப் பெயர்த்தும் படைத்திடுதல் பொருந்துமோவெனின்: அற்றன்று, அழியும் பருவமன்றாகிய காலத்தே அழிந்துபட்ட அவ்விளம் பெண்ணைப் பெயர்த் துந்தந்து கருணை பெய்ததாகலின் அஃது இழுக்கன்றாம். அல்லதூஉம், சுதந்திர அறிவாற்றலுடைய னாகிய முதல்வன் தன்றிருவடிப்பத்திமை பேணும் அன்பர்க் கிரங்கி அவர் வேண்டியவாறே செய்திட்டானாக லானும், மலவயத்தராய்க் கிடந்துழலும் எம்பொருட்டாகவே விதி விலக்குக ளியற்றிய தன்றித் தன்னியல்பில் ஞானசொரூபியாய் விளங்கும் பெருமானுக்கு மங்ஙனம் விதி விலக்கியற்றல் பொருந்தாதாய் முடியுமாதலானும், விதிவிலக்குடைய ரெல்லாம் பரதந்திரராதல் காணக்கிடத்தலால் இறைவனுக்கும் அவையுண் டெனக் கூறுதல் சுதந்தரத்திற்கு இழுக்காமாதலானும் அவ்வாறு கடாதல் இறைவனொரு வனுண்டெனக்கொண்டு வழுத்தம் பிரமசமா சத்தார்க்கு ஒருசிறிதும் இணங்காதென்றொழிக. இதுபற்றி யன்றே விதியும் விலக்குங்கடந்தார்க்கு விதியா லொன்றை விதிப்பாரார்” என்னுந் திருவாக்கு எழுந்ததென் றுணர்க. ன்னும், பௌதிக சாத்திரி ஒருவன் தனக்கிருக்கும் ஆற்றல் பற்றித் தன்மாட்டுள்ள கருவி கொண்டு தண்ணீரை இருவேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/118&oldid=1574534" இலிருந்து மீள்விக்கப்பட்டது