உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

மறைமலையம் 8 – 8

சூக்குமவாயுக்களாகப் பிரித்தலும், அங்ஙனம் பிரிந்த வாயுக்களைப் பெயர்த்துந் தான்விரும்பியவாறே தூலவுரு வத்திரவமாகச் செய்தலுங் காண்கின்றோம். இவ்வாறே இறைவனும் அதிசூக்குமவணுக் களாகப்பிரித்த அவ்விளம் பண்ணின் சரீரத்தைப்பெயர்த்தும் தூலவுருவ முன்னைச் சரீரமாகத்தன் முழுமுதற்றாற்றலாற் செய்திட் டானாகலின் அஃதுலகவியற்கையொடு முரணிற்று என்றல் யாங்ஙனம்? அவ்வவர்செய்யுந் தொழிற்கூறுபாடுகளெல்லாம் அவ்வவர் ஆற்றின் மிகுதிபற்றியே சிறப்பனவாம். பௌதிகசாத்திரி தன்னாற்றலுட்பட்ட தொன்றை அவ்வாறு செய்தானாயின், எல்லாம்வல்ல தன்னாற்றலுக்கேற்ப இறைவன் தானும் அவ்விளம்பெண்ணை அங்ஙனம் எழுப்பினான்.

L

"பிறந்தோரிறத்தலு மிறந்தோர் பிறத்தலும் அறந்தரு சால்பு மறந்தரு துன்பமும்” என்றவாறு போலப் பிறத்தலு மிறத்தலு மியற்கையா வாராநின்ற இவ்வுலகத்தே, அவ்விளம் பெண்ணை இறக்கச்செய்தும் பின் குடத்தினின்று பிறக்கச்செய்துந் திருவிளையாடலியற்றிய முதல்வன் உலக வியற்கையொடு முரணிச்செய்தானென்றல் அமையாது. அற்றேல் அஃதாக, யாம் உலகவியற்கையொடு முரண்பாடு டையதென்றல், அவ்விளம் பெண்ணை ஒரு தாய் வயிற்றினின்று பிறப்பியாமல், இடையொருகாலத்துக் குடத்தினின்று எழுப்பியதையே யாகலின் அதனையுணராமல் நீர்மேலே யுரைத்த வாதம் புரைபடுமாம்; பிறவெனின் நன்று சொன்னாய், அதனை யுணராதேம் அல்லேம். அங்ஙனம் உலகவியற்கையொடு பொருந்தச்செய்தல் வேண்டினா னாயின் முதல்வன் அவ்விளம் பெண்ணைத் தாய்க்கருப்பை யுலுதிப்பிக்கக்கடவ னென நீ கூறிது ஒக்கும். இறைவன் அவ்விளம் பெண்ணை வேறு சரீரத்தின்கண் ய்த்தல் வேண்டினானாயின் அவ்வாறே செய்வான். அங்ஙன மின்றிச் சிவநேசரென்னும் அன்பர்க்கு மகளாய்ப்பிறந்த அந்தயாக்கையின் கண்ணே அவ்வுயிரை அவர் வேண்டுகோட்கு இரங்கிப் புகுத்தவேண்டின மையின், அவ்வாறு இடையொரு காலத்துச்சூக்குமமாய்ப்போன அவள் யாக்கை யைத் தூலமாகத் திரும்ப அருள்செய்தா னென்றுணர்க. அவ்வாறு திரும்ப அருள்செயல் வேண்டினா னாயினும் சிவநேசர் மனைவியின் கருப்பையிற்புகுத்தி அவ்வாற்றால் அவளைப் பிறப்பித்தலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/119&oldid=1574535" இலிருந்து மீள்விக்கப்பட்டது