உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமான்

ஞானசாகரம்

இத்தனை

95

முதல்வனுக்கு முறையாமாலெனின் அதனால் அவ்விளம்பெண் மறுபடியுங் கருப்பையிற் கிடந் துழலும் பெருந்துன்பமே போதரலானும், தாய்தந்தை முதலாயி னார்க்கும் அதனாற் பேரிடரே விளையுமாதலானும், மணங் கூடும் மங்கைப் பருவங்காறும் வளர்த்த முன்னைச் சிரமங்க ளெல்லாம் பயனின்றிப்போதலேயன்றிப் பெயர்த்தும் அச் சிரமங்கள் கிளைக்குமாதலானும், பெருங்கருணை ண யுடைய னாகிய துன்பங்கட்கும் தன்னன்பரை யுள்ளாக்குதல் அவனுக்குக் கருணை யின்றாமென்பது பட்டு இழுக்காய் முடிதலானும் அவ்வாறு வினாதல் பெரிதும் ஏதமாமென்றுமறுக்க. அற்றேலஃதாக, எழுவகைத் தாதுக் களையுங் கொண்டு அங்ஙனம் அவள் சரீரம் படைத்திடுதலே முறையாமன்றி, அவற்றுள் ஒன்றாகிய எலும்பைக்கொண்டு அவள் சரீரத்தைத்திரட்டி எழுவித்தானென்றல் அமையாதா மெனின்; அறியாது கடாயினாய், ‘அண்டங்களெல்லாம் அணுவாக வணுக்களெல்லாம் அண்டங்களாக' ஒரு நொடியில் நிருமிக்கவல்லனாகிய இறைவன் மாட்டும் அங்ஙனஞ் செய்கைத்திறங் குறைவுபாடுண்டாகவினாதல் அறியாமை முதிர்ச்சியாவதன்றிப் பிறிதில்லையெனவிடுக்க. அல்லதூஉம், எலும்பை யொழித்து ஒழிந்த தாதுக்களெல்லாந் திரவ நெகிழ்ச்சியும் மென்மையுமுடையனவாகையால் அவையெல்லாஞ் சூக்குமரூபமாய் நின்றன; அவற்றைத் தூல மாத்திரித்து என்போடு ஒருங்குகூட்டிச் சரீரம்படைத் திட்டானா கலின் ஆண்டும் மாறுபாடில்லை யென்றொழிக. இது நிற்க.

இனி, ஞானசம்பந்தப்பிள்ளையார் மூன்றாம் வயதிலேயே பேரறிவினராய் விளங்கினாரெனல் யாங்ஙனம்? அஃதுலக வியற்கை யன்றாலோவெனின்; அறியாது கடாயினாய். போப் முதலான முன்னை ஆங்கிலப்புலவர்களும் பாலப்பருவத்தி லேயே புலமைமிகவுடையராய் விளங்கினாரென்பது எல்லார்க்கும் ஒப்பமுடிந்தமையின் உலகவியற்கை. உலக வியற்கையென நீர் கூறுவன வெல்லாம் அவ்வியாத்தியென்னுங் குற்றமுடையதா யொதுங்குமாறு அறியக்கடவீராக. உலக வியற்கைக்கு நீர் வரைந்து சொல்லும் இலக்கணம் பெரும்பான்மையாய் நிகழ்வ தென்றுரைப்பீராயின் அப்போது அந்த அவ்வியாத்திக்குற்றம் வரமாட்டாது; யாங்கூறும் வாதங்களும் வாய்ப்புடையனவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/120&oldid=1574536" இலிருந்து மீள்விக்கப்பட்டது