உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

– 8

மறைமலையம் - 8

யாமென்பதூஉம் எளிதிலுமக்கு விளங்கும். இன்னும், உலக வியற்கையென்பது ஈசுரன் ஆன்மாக்களின் பக்குவ முதிர்ச்சிக் கேற்பத் தன்சுதந்திர அறிவாற்றலால் நிகழ்த்துங் கிருத்திய வமைப்பேயாமென யாங்கூறும் இலக்கணத்தை நீர் ஒரு சிறிது உளங்கொளப் பொருத்தியாராய வல்லீராயின், 'பெரும் பான்மை' யென அடைகொடுத்து இடர்ப்பட்டு நீர் இலக்கணங் கூறுதலும் வேண்டா. அல்லது அவ்வடைகொடுத்து இலக்கணஞ் சாலுவீராயினும் அதுவுமெம் வாதத்திற்கு அனுகூலஞ் செய்வதன்றிப் பிரதி கூலஞ்செய்யுமாறில்லை. இவ்வாறன்றி நீர் கூறும் இலக்கணங்களெல்லாம் போலியாய்ச்சான்றோராற் கொள்ளப்படாவென்றொழிக. ஆகவே, ஞானசம்பந்தப் பிள்ளையார் மூன்றாம் வயதிலேபேரறிவினராய் உலகை உய்வித் தது உலகவியற்கையொடு பொருந்துவதேயா மென்றுணர்க.

இனி, நிரீசுரவாதிகளுள் ஒருசாரார் ஞானசம்பந்தப் பிள்ளையாரே தாம் நிகழ்த்திய அற்புதங்களைக் குறிப்பிட்டுப் பதிகங்கள் கட்டளையிட்டருளினாரென்பதற்கு அத்தாட்சி என்னையென்று ஆசங்கிப்பாராலெனின் உலகவழக்கும் ஆன்றோராசாரமுமே, அதற்கு உறு சான்றும், பிள்ளையாரோடு ஒருங்கிருந்த அப்பமூர்த்திகளும், அவர்க்குச்சிலகாலம் பின்னிருந்த சுந்தரமூர்த்திகளும் அவர்க்குச் சிலகாலம் பின்னிருந்த நம்பியாண்டார் நம்பிகளும், அவர்க்குச்சிலகாலம் பின்னிருந்த பெரியபுராணமுடைய சேக்கிழாரும் பிள்ளையார் அருமைபெருமைகளை மிகவிரித்துரைக்கும் வழக்கானும் ஆசாரத்தானும் முன்னெடுத்துக்காட்டிய பதிகங்களும் பிறவும் பிள்ளையார் கட்டளையிட்டருளியனவே யாமென்க. அற்றே லஃதாக, அவ்வான்றோர் உரையைத்தான் கொள்ளுதற்கு அத்தாட்சியென்னை யெனின், நன்று வினாயினாய், இத்தனை ஐயுறவுடையாய்த் தெளியமாட்டாது ஆசங்கை நிகழ்த்து முனக்கு எத்தனைதான் யான் உரைப்பினும் மேன்மேலும் ஆசங்கை நிகழ்த்தி வரம்பிறந்தோடும் அநவத்திதை என்னுந் தோடத்திற்கு ஞ்செய்வையாகலான் அவ்வாறெல்லாம் உனக்குப் பரிகாரந்தேட ஈண்டு யாஞ் சிரமமெடோம். ஆயினும் உன்னை, இலேசாக அறிவு பிரகாசிக்கும் உயர்நிலத்தின் கண் நிறுத்துதற்குச் சிறியதோர் மார்க்கங்காட்டுதற்பொருட்டு நின்மாட்டு யாமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/121&oldid=1574537" இலிருந்து மீள்விக்கப்பட்டது