உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ

ஞானசாகரம்

97

குழந்தையாயிருந்த பருவத்திலே நின்தாய் இன்னாளென்று யாங்ஙனம் உணர்ந்தாய்? அவளுரைப்பவன்றோ உணர்ந்தாய். அவள்பாலுண்ணுக என்று சொல்லி உன்னை ஊட்டிய காலத்தினெல்லாம் நீ உணவு கொள்ளும் அப்பொருளை யாங்ஙனம் உணர்ந்தாய்? அவளுரைப்பவே யன்றோ உணர்ந்தாய். இவ்வாறே உலகியற் பொருள்கட் கெல்லாம் பெயரிடுமாறுந், அவற்றைத்தெரிந்து பயன்படுத்து மாறு மெல்லாம் யாங்ஙனம் ணர்ந்தாய்? அவளுரைப்பவே யன்றோ உணர்ந்தாய். அக்காலங் களினெல்லாம் நின் அன்னை சொல்லியவற்றை அவள் சொல்லியவாறே நீ நம்பினதன்றி, அவள்சொன்ன ஒவ்வொன் றனையும் ஆராய்ச்சி செய்து பின் நீ நம்பியதுண்டோ? இல்லையே, இப்போதுதான் என்ன! நீ கலைபயில் கழகஞ்சென்று கல்விபயிலுங் காலங்களினெல்லாம், உபாத்தி யாயர் சொல்லிய விஷயங்களை ஒருங்கே நம்பி, அந்நம்பிக் கையின்மேல் உன் அறிவெனுந் திண்ணிய அரணைக் கட்டுதலன்றி, உபாத்தியாயர் கற்பிக்கும் ஒவ்வொன்றிலும் நீ ஐயங்கொண்டு தெளிந்த நீ துண்டோ? உபாத்தியாயர் ஒரு பொருளுக்கு நீர் என்றும் ஒன்றுக்கு நிலமென்றும் ஒன்றுக்குத் தீ என்றும் பலவாறாகப் பெயரிட்டுக் காட்டினால் அதற்கு ஏன் அப்பெயர் அமைத்தார் என்று நீ ஆராய்ந்ததுண்டோ? அல்லது அவர் சொல்வது பொருத்தந்தானோவென்று நீ சந்தேகம் நிகழப் பெற்றதுண்டோ? இவையெல்லாம் ஒரு புறங்கிடக்க, நீ தினந் தோறும் நண்பர்களோடுகலந்து பழகுங்காலும் பொருளீட்டுங் காலும் அவ்வவர் உரைக்குஞ்சொற்களையும் பொருள்களையும் பொருந்த ஆராய்ச்சிசெய்துதான் நம்புகின்றனையோ? ஒருவர் அமெரிக்காதேயம் ஒன்று இருக்கின்றது என்றுரைத்தால், அப்படி ஒருதேயத்தை நான் கண்டதில்லையால் அதுபொய் யென்பாயோ? ஒருகாலும் உரையாய் இருந்தவாற்றால், உன்னறிவு முதிர்ச்சியும் ஆராய்ச்சித்திறனுந் தொழிலொருமைப் பாடும் பிறவுமெல்லாம் பிறர்சொல்லின்கண் உனக்கு இயல்பாகவெழுந்த நம்பகம்பற்றியே மெய்யாய் நிகழ்வதல்லது வேறு இன்றாம். இனி, அங்ஙனம் உனக்கு நிகழ்வதாகிய நம்பகவுணர்ச்சியும் உனக்கு அதனை வருவிக்கின்றவர் மெய்யுரையியல்புபற்றியே உரம் பெற்றுத் தோன்றும். அவர் தூர தேயத்தில் நிகழ்ந்த சம்பவம் என்றனைத்தாம் நேரே கண்டிருந்ததாக உரைத்திடுவராயின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/122&oldid=1574538" இலிருந்து மீள்விக்கப்பட்டது