உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

மறைமலையம் லயம் – 8

அச்சம்பவத்தின்கண் நம்பிக்கை மிக உறுதியாக உனக்குத் தோன்றாநிற்கும்; அவர் அதனைத் தாமே நேரிற்காணாமற் கண்டார்ஒருவர் தமக் குரைப்பத் தாங்கேட்டவாறே அதனை

உனக்கு.

தொல்காப்பிய முழுமுதன்மை

L

சென்ற இரண்டாம். இதழிலே நம் ஆப்தரும் திரிசிரபுரம் செயிண்ட் ஜோசப் கலாசாலைத் தமிழ்ப்பண்டிதருமாகிய ஸ்ரீமான் சவரிராயபிள்ளையவர்கள் தொல்காப்பியத் தமிழ் முழுமுதனூலைக்குறிப்பிட்டு வரைந்த விஷயம் நம்முடைய நண்பரெல்லாருமறிவர் அதன்கட் பிரமதத்திலே பண்டிதர வர்கள் நட்பின் கிழமை பிழையாவாறு நாமெல்லாம் உண்மைப் பொருளறிதலின்கண் வேட்கைமிகவுடையேமாய்த் தருக்கம் நிகழ்த்தித் தெளிவுறுதல் வேண்டுவெனயாப்புறுத்த துறை எமக்குக் கழிபேருவகை ஊட்டாநின்றது. இக்காலைத் தமிழ்ப் புலவர் தமக்குள்ளே ஒருமைப்பாடுடையராய் வாதம் நிகழ்த்தி உண்மையுணர்வு பெறக்காண்டல் அரிதினுமரிதாம். இங்ஙனம் பொறாமையும் முரண்பாடும் பெரிதுடைய இக்காலத்தில், அவ்விழிதகவு களைந்து நியாய நெறிபிறழாது உரிமை பாராட்டியும் இன்சொல் அளாவியும் வாதநிகழ்த்தி மெய்ப் பொருட்பேறு உடையமாதல் வேண்டுமென உறுதியுரை மொழிந்த பண்டிதரவர்கட்கு எழுமையுந்தொடரும் உழுவலன்பு பாராட்டுங் கடப்பாடு பெரிதுடையோம். மக்களாய்ப் பிறந்த ஆன்மாக்கள் ஒவ்வொருவருக்குந் தத்தம் அனுபவமே லீடு பக்குவமுதிர்ச்சி அறிவுநுட்பம் முதலியவற்றிற்கேற்பவே ஆராய்ச்சியுணர்வும் பொருட்பேறும் பிறவா நிற்கும். ஒருவருக் குள்ள அனுபவவியல்பும் பக்குவமுறையும் அறிவு வளர்ச்சியும் ஏனையொருவர்க்குள்ளவற்றோடு ஒவ்வா. இதனால் அவ்வவருந் தத்தம் அபிப்பிராயத்தின் கண்ணே நிலைபேறு மிகவுடைய ராவர். அங்ஙனம் நிலைபேறு பெரிதுற்று விளங்கும் ஒருவர் அபிப்ராயத்தினை அறக்களைந்து அந்நிலத்தின்கண் தன் அபிப்பிராயத்தினை நாட்டல் வேண்டுமென்னும் விழைவு ஒருவனுக்கு எழுதருமாயின் அஃது அவனறியாமையின் விளைவா வதன்றிப்பிறிதாமாறில்லை. அல்லதூஉம், அங்ஙனஞ்செய்ய முந்துறுவான் றன் அபிப்பிராயத்தை வேறுபடுக்க வேண்டுமென

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/123&oldid=1574539" இலிருந்து மீள்விக்கப்பட்டது