உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

L

99

வேறொருவர்வற்புறுத்திடுவாராயின் அவருரைத்த அவ்வுரை கொண்டு தன்னபிப்பிராயத்தைப் புறம்படுக்க ஒருப்படுவானோ? ஆகலான், தம்முள்மறுதலைப் பட்ட அபிப்பிராயங்கள் நிகழ்தல் பற்றி நட்பின் கிழமை யுடையார், அக்கிழமைபோழ்ந்து பகைமை வித்திடுதல் பெரிதும் இரங்கற்பாடு பயப்பதொன்றாம். ஆயினுந் தமக்குஇனியவாகக் காணப்படும் தம்மாராய்ச்சித் திறங்களை உலகின்கட் பிரசித்தஞ் செய்து உலகைப் பயன் படுத்தல் வேண்டுமென்னுங்கருணை யுணர்வு நிகழ்ச்சியுடையார் ஒருவர் அங்ஙனமே அவற்றைப் பிரசித்தஞ்செய்தவழி, அவற்றின் கண் மாறுபாடுடையராய்த் தம்மொடுமலையுமோரை நல்லறிவு காளுத்தித் திருத்துந் துணையும் பொறைமிகக்கொண்டு அவரைத்தெருட்டற்பாலார். இனித்தம்மொடு மலைந்து வாதநிகழ்த்துவார் உரைக்கும் பொருன்களே மெய்ம்மையுடைய வாயின் ஆண்டவற்றைத்தj இக்கொண்டு தம்மபிப்பிராயம் விடுதலும் நடுநிலையாளர்க்கு இன்றியமையாத கடமையாம். இங்ஙனமாகிய அரியகடமை மேற்கொண்டொழுகும் பண்டிதர் சவரிராயரவர்கட்கு வந்தனந்தந்து அவர்கள் விஷயத்தின்மேல் எம்மாராய்ச்சி சென்றவா றுரைப்பாம்,

னிப்பண்டிதர் சவரிராயரவர்கள் சித்தாந்ததீபிகையிலே தமிழ்மொழியியல் விரித்துரைத்த நுட்பவிஷயங்கள் பெரும் பாலான எமக்கு அங்கீகாரமாவனவேயாம். அவற்றுள் ஒருசில விஷயங்களின் மாத்திரம் எமக்கு உடன்பாடு கிடையாது. அவ்வொருசில விஷயங்களுள்ளும் தொல்காப்பியத்தமிழியன் முதனூல் இடையிடையே செருகப்பட்ட சூத்திரங்கள் பல உடையதாம் என்னும் பண்டிதரவர்கள் அபிப்ராயத்தில் முரண்பாடு பெரிதுடையோமாகலின், அங்ஙனம் முரண்படு தற்குரிய காரணங்கள் நிரலே நிறுத்துரைப்ப வெடுத்துக் கொண்டாம்.

இனிப்பண்டிதர் சவரிராயரவர்கள் அபிப்பிராயத்தை ஆசங்கித்து அவர்கட்கு நாம் விடுத்த ஆப்தலிகிதத்தில் ஒரு நூலிடையிடையே வேறு வேறு விஷயங்களை எழுதிச்செருகும் வழக்கம் பண்டைக்காலத்துத் தமிழ்ப்புலவர் பாலின்றாம். அல்லது அங்ஙனம் நிகழ்ந்ததாயிற் சிந்தாமணியிற் கந்தியார் பாட்டுக்களும் இடையிடையே கலரந்தன வென்றுரைத்த ஆசிரியர் நச்சினார்க்கினியர் தாமுரை கூறிய தொல்காப்பிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/124&oldid=1574540" இலிருந்து மீள்விக்கப்பட்டது