உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

மறைமலையம் 8 – 8

முதலான மற்றைநூல்களின்கண்ணும் அதனைத் தெரிந்து கூறிடுவார். அவரேயன்றித் தொல்காப்பியத்திற்கு உரைகண்ட இளம் பூரணர், சேனாவரையர், பேராசிரியர், கல்லாடர் முதலாயினாரும் அங்ஙனம் ஒன்று நிகழ்ந்ததாகக் கூறினாரல்லர். என்று நம் அபிப்பிராயந் தெரிவித்தோம். அவ்வபிப்ரா யத்தின் கண் யாமொழிந்த சிந்தாமணியிற் கந்தியார் பாட்டுக்களும் இடையிடையே கலந்தன' என்னும் வாக்கியப்பொருளே பண்டை க்காலத்துத் தமிழ் நூலுரைகளிலும் பிறபொருட் கலவையுண்டென்பதை நிறுத்தும் பிரமாணமாம் என்று ஆசங்கை நிகழ்த்தினார்கள். நாமெழுதிய அவ்வாக்கியத்தின் கருத்துறுபொருள் அதுவன்றாம். சிந்தாமணி ஆரியமொழிக் காப்பியவிலக்கிய வழக்கே முழுவதூஉந் தழீஇ வந்த அகம், புறம், கலி, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் முதலியன போல்வதன்று. ஆரியமொழிக்கண்விரிந்த வேதோபநிடத நூலுரைகளின்கண் நிகழ்ந்த பிறபொருட்கலவை, அவ்வாரிய மொழிச்சம்பந்தம் பெரிதுற்று விளங்கிய சீவகசிந்தாமணியினும் போந்ததென்றல் ஓர் வியப்பன்று. அற்றேலஃதாக, ஆரிய வேதோபநிடதங்களிற் பிறபொருட்கலவை நிகழ்ந்த தென்றும் தமிழ் நூலுரைகளில் அங்ஙனம் நிகழ்ந்ததில்லையென்றுங்கூறிய தென்னை? ஒருநூல் பிறபொருட்கலவையுறுதல் உலகவியற்கை யாய் நிகழ்வதொன்றாலோவெனின் நன்று சொன்னாய், ஆரிய வேதோபநிடதங்கள் பொருள்வரம்பு அறுத்து அதனைப்பகுத்து ஒன்றோடொன்று இயைபுறுமாறு நெறிப்படுத்துரைத்து அப்பொருளியல் தெளிதரமொழியும் பெற்றியவல்லவாம். ஆண்டாண்டு உரைக்கப்படும் பொருள்கள் அவ்வவ்விடங்களி லேயே உய்த்துணர்ந்து தெளியப்படுவனவாய் முன்பின்னுள்ள வற்றோடு பொருட்பொருத்தம் பெரிதுறுவனவல்லவாயுள்ளன. இதற்கென்னையோ காரணமெனின் வேறுவேறுகாலங்களில் வேறுவேறாசிரியராற் செய்யப்பட்ட அம்மந்திரவுரைகள் பின்னோர்காலத்து ஒருங்குதொகுக்கப்படுதலும், அங்ஙனம் ஒருங்கு தொகுக்கப்பட்டுழியும் அந்நிலையில் நிலையுதல் பெரிதின்றிப் பின்னுற்பத்தியாம் ஆசிரியர் சிலராற் செய்யப்பட்ட வேறுவேறு மந்திரவுரைகளோடும் ஒருங்குசேர்க்கையுற்றுப்

பெருகுதலுமுடையனவாய் அவை ஒருதலையின்றிப் பஃறலைப் பட்டு வந்தனவாமென்பது காண்டலளவையானுங் கருதலளவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/125&oldid=1574541" இலிருந்து மீள்விக்கப்பட்டது