உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

101

யானுந் தெற்றென விளங்குதலின் ஆண்டு அந்நூல் களினெல் லாம் பிறபொருட்கலவை நிகழ்தல் இயற்கையேயாம். மற்றுப் பண்டைக் காலத்துத் தமிழ் நூலுரைகள் பொருள்வரை யறுத்துப் பாகுபாடு நனிவிளங்கமுறைதெரித்துத் தெளித் துரைக்கும் மரபுபிழையா நீர்மையவாமென்பது, தொல் காப்பியம், திருக்குறள், திருக்கோவையார், சிலப்பதிகாரம், மணி மேகலை. கலித்தொகை முதலிய நூலாராய்ச்சி சிறிதுடை யார்க்கும் நன்றுணரக்கிடக்குமாகலின் அவை பிறபொருட் கலவை கொண்டு வடுப்படுதலின்றி உண்மைப் பொருட்பொலிவு பெரிதுடையவாய்ச் சுடர்ந்து விளங்கின. ஆகவே, ஆரியமொழி யில் வேதோப நிடதங்கள் நாளுநாளும் ஆசிரியர் பலராற் பெருக்கமுற்று ஒன்றோடொன்று வேறுபட்ட பொருட் கலவை திமிர்ந்து வந்த அவ்வியல்புபற்றியே அவரவர் தாந்தாம் வேண்டிய வாறெல்லாஞ் சுலோகங்களெழுதி அவற்றிடையே செருகுதற்கு டம்பெற்றார். தமிழ் நூலுரைகள் அங்ஙனங் காலந்தோறும் வேறுபடும் விரவுப்பொருளுடையவாதலின்றித் தாந்தாமெடுத்துக் கொண்ட பொருளை நிரலே நிறுத்து மலைவின்றி யுரைமுடிவு காட்டுந் தன்மையவாய் நிற்றலின் நிற்றலின் அவற்றின்கட் பிறர் தாம்வேண்டியவாறே எழுதிச்செருக இடம்பெறாராயினார்.இது பற்றியன்றோ, படலங்களையும் இயல்களையும் நிரல்பட வமைத்துச் சரிதவியல் பிறழாது தொகுத்தும் வகுத்தும் முடித்தும் பொருண்மரபு எழிலுறச்செய்த பெரியபுராணத்தின்கட் பிறவிடங்களில் இடைச்செருகுதற்கு அவகாசம்பெறாது, ஆண்டாண்டுப் புனைந்துரைபற்றி யெழுந்த அலங்காரப் பகுதிகளிற் பிற்காலத்து வெள்ளியம்பலத் தம் பிரானென்பார் ஒருவர் தாமும் அலங்காரமான சிலசெய்யுட் களியற்றி அவற்றிடையே செருகுவித்தார்; அங்ஙனஞ்செய்திட்ட அத்தம்பிரான் போலிச்செய்யுட்கடாமும் உலகவியற்கை தழாதுவரூஉம் அபூத அலங்காரவகை மிகக்கொண்டு

T

சொன்னடைவேண்டாச்சொற்கண்மேன்மேற்றலைப்பெய்து செல்லுநெறித்தாய்ப் பொருளமைப்பு அறிவுடையோரால் நகுதற்கேதுவான புன்மையுற்று நிற்கப் புரைபடுகின்றன வாகலின், லகவியற்கையொடு பொருந்துந் தன்மைப் புனைவுமிக்கொண்டு சொன்னடை வேண்டுஞ் சொற்கள் வேண்டுமிடங்களிலியைந்து எழிலூறியின்பம்பயப்பப் பொருள மைப்பு ஆராயுந்தோறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/126&oldid=1574542" இலிருந்து மீள்விக்கப்பட்டது