உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

மறைமலையம் - 8

ஆழ்ந்தாழ்ந்து செல்லச் சுவை மிகத்தந்துசெல்லும் பெற்றியவாய்த் திகழும் ஆசிரியர் சேக்கிழார் திருவாக்கான அலங்காரச் செய்யுட்களோடு வேறுபாடுற்று நவமணித் தொகுதியினிடை யிடையே கண்டெடுத்தெறியப்படும் பரல் போலப் பிற்காலத் தறிவுடையோரால் வேறு பிரித்திடப்பட்டன. எனவே, பிறபொருள் விராய்வருதற்கு இடம் பெறு நூலுரைகளெல்லாம் தம்முட்பொருட்சம்பந்த நெறிப்பாடின்றி வரும் ஆரியமொழி நூலுரைகளேயாமென்பதூஉம், பொருட்சம்பந்த நெறிப்பாடு பெரிதுடைய பழந்தமிழ் நூலுரைகள் அங்ஙனம் இடம்பெற வேண்டும் என்பதும் இனிது விளங்கும்.

இனித் தொல்காப்பிய விலக்கணமோ ஆண்டாண்டுப் புனைந்துரைவகை பற்றி யெழூஉஞ்செய்யுட்டொகுதி போலாது, சொற்களையும் பொருள்களையுங்கிடந்தவாறெடுத்துக்கொண்டு நெறிபிறழாது இலக்கணங்கூறுவதாகலின் அதன்கட் பிறர் தமக்குவேண்டியவாறே சூத்திரங்களெழுதி யிடை யிடையே செருகுதற்கு ஒருசிறிதும் அவகாசம் பெற மாட்டாரென்பது தேற்றமாம். அல்லது அவ்வாறு நிகழ்ந்த தென்றே கோடுமாயினும்,

அருகிய வழக்காய் யாண்டேனும் ஓரிடத்தே பயிலப்

பெறுவதாகிய நூல்போறலின்றிப் பெருகிய வழக்காய்ச் செந்தமிழ்த்தனி முதன்மொழியாராயுந் தென்னாடு முழுவதூஉங் குறிக்கொண்டு பயிலப்பெறும் மாட்சி பெரிதுடைய தொல் காப்பியத்தின்கண் ஆசிரியராற் செய்யப் பட்ட சூத்திரங்களிவை, ஏனையோராற் செய்து சேர்க்கப்பட்ட சூத்திரங்களிவை யென்னும்பாகுபாடு பண்டைக்காலத்தே ஆராய்ச்சிப் பட்டிருக்கும்.என்னை? பிரசித்தியாகிய ஒரு பொருட்கண்ணுள்ள குறைபாடு யாண்டும்பரந்து எல்லார்க்கும் புலனாமாதலினென்க. இவ்வுலகியல் பற்றியன்றே ஆசிரியர் திருவள்ளுவநாயனாரும் குடிப்பிறந்தார் கண்விளங்குங் குற்றம் விசும்பி, மதிக்கண் மறுப்போலுயர்ந்து என்றோ என்றோ துவாராயினதூஉமென்க. இடைச்சங்கத்தார்க்குங் கடைச் சங்கத்தார்க்கு நூலாயிற்றுத் தொல்காப்பியமென்று களவியலு ரைப்பாயிரங் கூறுதலானும்,

ளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், கல்லாடர், நச்சினார்க்கினியரை யுள்ளிட்ட ஆசிரியன் மாரெல் லாரும் அத்துணைச் சிறப்புடையதாதல் பற்றியே யதற்குரை கூறப் புகுந்தாரல்லது பிறிதின்மையானும், நுண்மாணுழை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/127&oldid=1574543" இலிருந்து மீள்விக்கப்பட்டது