உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

103

டைச்

புலமுடையரான அவ்வாசிரியரெல்லாம் அதன்கண் இடை செருகு தனிகழ்ந்ததெனயாண்டு முரை யாமையானும், அன்றி அஃதுண் டெனக்கொள்ளினுஞ் செந்தமிழுலகியல் வழக் கோடஃது ஒவ்வாமையானும் அவ்வாறு கூறுதல் அடாதென் றொழிக. ங்ஙனமாகலின் சிந்தாமணியிற் கந்தியார் பாட்டுக்களும் இடை டையிடையே கலந்தன என்னும் வாக்கியப் பொருளாற் பண்டைக்காலத்தமிழ் நூலுரைகளெல் லாவற்றின் கண்ணும் பிறபொருட்கலவை யுண்டென்னுங் கருத்துப் பெறப்படு மாறில்லை. அக்கருத்து எமக்கு உடன் பாடாவதூஉ மன்று இது கிடக்க.

று

னிப்

இனிப்பண்டிதர் சவரிராயரவர்கள், தொல்காப்பியம் ஆசிரியராற் செய்யப் பட்டகாலத்து அறுநூறு சூத்திர முடைதாயிருந்ததெனவும், அதனை அரங்கு கொண்டிருந்து அதங்கோட்டாசான் நிகழ்த்திய கடாக்களுக்கு விடையுள்ள றுத்து அரில்தபத்தெரிக்கின்றுழித் தெய்வப் புலமைத் தொல் காப்பியனார் இடையிடையே வேண்டுமிடங்களிற் செய்து சேர்த்த சூத்திரங்களானே அது முன்னையினும் மும்மடங்கு பெருகியதெனவும் வாராநிற்கும் ஐதிகத்தானே அந்நூல் முன்னிலையிற் பின்னிலைபெருக்கமுற்றதென்பது உய்த் துணர்ந்து கொள்ளற் பாற்று என்று உரைத்தார்கள். அங்ஙனம் உரைத்துழி அவ்வைதிகத்தினுண்மை எவ்வாறாயினுமாகுக என்று அதன் கட்டமக்கு உடம்பாடு மறுத்திட்டார்கள். பண்டிதரவர்கள் தொல்காப்பியம் முன்னிலையிற் பின்னிலை பெருகியது என்னுந்தமது மேற்கோளை வலியுறுத்தற்பொருட்டு எடுத்துக் கொண்ட ‘ஐதிக’ வேதுவின் சொருபவுண்மை தமக்கு இனிது விளங்காமையின், அவ்வேதுசொருபமுண்மை யறியப் படாத குற்றத்தால் ஏதுப்போலியாய்த் தாமெடுத்துக்கொண்ட மேற்கோளை வலியுறுத்தமாட்டாது வேறோராற்றாற் குற்றப் படும் போலியே துக்கூறி அதனால் உய்த்துணர்வாம் உய்த் துணர்வாம் என்று நெகிழ்ந்துபோதல் ஐரோப்பிய பண்டிதர்கள் பலர்க்கு இயற்கையாவதொன்றாம். அதற்கு அவர்கள் பாஷையும் இடந்தந்து நிற்கின்றது. அவர்களுரைக்கும் வாதங்கள் பெரும்பாலன தமிழ்பாஷையிலே எழுதப்படுமாயின் அவை துர்ப்பலமுடையவாமாறு நன்று விளங்கும். இங்ஙனமாக ஆப்தர் சவரிராயரவர்களும் அவ்வைரோப்பிய பண்டிதர் நெறிபற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/128&oldid=1574544" இலிருந்து மீள்விக்கப்பட்டது