உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

  • மறைமலையம் - 8 –

அவ்வாறு வழூஉப்பட மொழிந்தார்கள். வாதம் நிகழ்த்தி யுண்மைப்பொருள் புலப்படுக்கவேண்டுமென்னும் விழைவுடை யாரெல்லார்க்கும் தாங்கூறும் ஏதுவை வலியுறுத்தி அவ்வாற்றால் தாமெடுத்துக்கொண்ட மேற்கோளைச் சாதித்தல் இன்றியமை யாத கடமையாம். ஈண்டுக்கூறிய தருக்கத்தில் நாம் நிரம்பக் கடுமையாகச் செல்கின்றோமென்று நம்மரிய ஆப்தர்களான சவரிராயரவர்கட்குத் தோன்றுமானால், அவர்கள தனைப் பொறுக்கும்படி வேண்டுகின்றோம்.”

இனி அவர்களெடுத்துக்காட்டிய 'ஐதீகந்’ தானும் ஆகாயத்திலெழுதிய சித்திரபடாம்போல வெறும்போலியே யாமாறு ஒரு சிறிது காட்டுதும். அவ்வைதிகம், பண்டிதரவர்கள் சொல்லக்கேட்டதேயன்றி வேறியாருமுரைப்பக் கேட்டிலேம். யாந்தாமறியேமாயினும் பிரபலவித்துவான்களா யுள்ளோரறிவர் என்னுந் துணிவாலவரையெல்லாம் யான் வினாவியபோது 'யாமறியேம், இவ்வைதிகம் ஏதோபுதுவதாகத் தோன்றுகின்றது' என்றுஅவரெல்லாந் தங்கருத்துண்மை அறிவித்துவிட்டார்கள். எமக்கு இலக்கண இலக்கிய நூலறிவு கொளுத்திப் பொறைக் கோ ருறையுளாய்த் திருவாரூரிலிப்போது அமர்ந்திருக்கும் எம்மாசிரியர் ஸ்ரீமத் வெ. நாராயண சாமிப் பிள்ளையவர்களும் ங்ஙனம் ஓரைதிகமுண்டெனக் கூறினாரல்லர். இனி, ஆசிரியர் நச்சினார்க்கினியரை யுள்ளிட்ட தொல்லாசிரியர் தாமும் ங்ஙனமோரை திகமுண்டென யாண்டுமுரைப்பக் கண்டிலம். இவ்வாறு சான்றோர் பரம்பரை வழக்கானாதல் தொல்லா சிரியர் உரைவழக்கானாதல் புலனெறி வழக்கானாதல் பெறப் படாமல், யாரோ சிலர் பொய்யாகக்கட்டி வழங்கிய புது வழக்காய் அருகிவரும் ஐதிகமொன்றானே, ஆன்றோர் வழக்கோ டொத்துவருந் தொல்காப்பிய முழு முதனூலின்கட் கலவை யுண்ெ

ன்றல் ஒரு சிறிதும் பொருந்தாதா மென்று மறுக்க, சரிதமுறைபிறழாது நிறுவவல்ல ஏதுக்கள் பரவை வழக்காய் ஆன்றோ ராசாரமுடையனவாய் வருதல் வேண்டு மென்பது ஒரு தலையாய் எல்லார்க்கும் ஒப்பமுடிந்தது. இம் முறை, பிரபல ஆங்கிலதத்துவசாத்திரியராகிய லாக் என்பவர் மக்களுணர் வுரை என்னுந் தம் நூலுள் விரித்தெடுத்து விளக்கு மாற்றானுங் காண்க. இதனானே நம் ஆப்தரவர்களெடுத்துக் காட்டிய ஐதிகவுரைக் காரணம் பொருந்தாதென்பது காட்டினாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/129&oldid=1574545" இலிருந்து மீள்விக்கப்பட்டது