உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

153

ஓரிரவில் தீக்கொளுவி வி மாய்க்கப்புகுந்த அவர்க்கு அத்தண் னை சாலுமெனத்தாங் குறிக்கொண்ட ருளுத லானும் பிள்ளையார் மறாதிருந்தாராகலின் அது குற்றமாதல் யாண்டையதென்றொழிக. இங்ஙனம் பெரியராயினார் தம்மை யிகழ்ந்தமை தாம் பொறுப்பதன்றித் தம்மைச் சார்ந்தாரை அங்ஙனம் பிறரிகழின் அதனை ஒருசிறிதும் பொறுக்கலாரென்றுணர்க. இனி அதனையும் பொறுத் தலாற் போந்த விழுக் கென்னையெனின்; - வலியோரான் மெலியோர் நலியப்படுதன் முதலான தீயகருமங்கள் பல்கி உலகு வரம்பழியுமென்றுணர்க. இப்பெற்றியெல்லாம் ஆசிரியர் சேக்கிழார் ஒருங்குணர்ந்தன்றே.

-

.

னி

"மன்னவன் மாறன்கண்டு மந்திரியாரை நோக்கித் துன்னிய வாதிலொட்டித் தோற்ற விச்சமணர்தாங்கண் முன்னமே பிள்ளையார்பா லனுசித முற்றச்செய்தார் கொன்னுனைக் கழுவிலேற்றி முறைசெய்க வென்றுகூற

"புகலியில் வந்தஞானப் புங்கவரதனைக் கேட்டும் இகலில ரெனினுஞ் சைவரிருந்துவாழ் மடத்திற் றீங்கு தகவிலாச் சமணர் செய்த தன்மையாற் சாலுமென்றே

மிகையிலா வேந்தன் செய்கை விலக்கிடா திருந்தவேலை”

என்று ஓதுவாராயின தூஉமென்க. இவையெல்லாம் ஒருசிறிதும் பார்த்துணரமாட்டாமற் சிறுமகாரைப் போற் சமணர் கழுவேறினாரென்னுஞ் சொற்கேட்ட துணையானே யதனை யாய்ந்துபாராது குற்றங் கூறப்புகுந்த நண்பர் திறம்பெரிதும் இரங்கற்பாலதொன்றாம். இதுகிடக்க.

இனிச் சைவதிதாந்திகடாம் சமயப் பொறுமை யுடையரென்ப தென்னை பிறருமஃதுடையராலோவெனின்; சைவசித்தாந்த நுட்பப்பொருளுணரவல்லார்க்கு எல்லாச் சமயங்களிலுள்ள எல்லாவான்மாக்களுந் தத்தம்பக்குவ வேறுபாட்டிற்கேற்பப் பல்வேறு சமயவழிநின்று அதனை வழுவாத நுட்டித்தொழுகி ஆண்டிருந்தவாறே அபரமுத்திப் போகந் துய்த்துப் பின்னையொருகாலத்துப் பரமுத்தி தலைப்படுவர் ஆகலின் எல்லாம் மெய்ச்சமயங்களேயாய் ஈசுரனுக்கு அங்கீகாரமாவனவாமென்னுஞ் சித்தாந்தவுரைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/178&oldid=1574595" இலிருந்து மீள்விக்கப்பட்டது