உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

66

  • மறைமலையம் 8 – 8

பாருள் இனிது விளங்காநிற்கும். இதனையே அப்ப மூர்த்திகள் "விரிவிலா வறிவினார்கள் வேறொரு சமயஞ் செய்தே, எரிவினாற் சொன்னாரேனு மெம்பிராற் கேற்றதாமே” எனக் கூறியருளினார்கள். இனி அருணந்தி சிவாசாரிய சுவாமிகள் அறுவகைச் சமயத்தோர்க் க குமவ்வவர் பொருளாய்” “ஓதுசமயங்கள் பொருளுணரு நூல்களொன்றோ டொன்றொவ்வாமலுள பலவுமிவற்று, ளியாது சமயம் பாருணூலியாதிங்கென்னி லிதுவாகு மதுவல்ல வெனும் பிணக்கதின்றி, நீதியினா லிவையெல்லா மோரிடத்தே காண நிற்ப தியாதொருசமய நின்றுமகச் சமயம் புக்கும் புகன் மிருதிவழி யுழன்றும் புகலுமாச்சிரம, வறத்துறைகளவை யடைந்து மருந்தவங்கள் புரிந்து மருங்கலைகள் பலதெரிந்து மாரணங்கள் படித்துஞ், சிறப்புடைய புராணங்களுணர்ந்தும் வேதச் சிரப்பொருளை மிகத்தெளிந்துஞ் சென்றாற் சைவத், திறத்தடைவரிதிற் சரியைகிரியாயோகஞ் சிவனடியைச் சேர்வர்" என அவ்வச்சமயவிதி வழிநின்று

மதுசமயம்” “புறச்சமயநெறி

செலுத்திய பின் ஞானத்தாற்

வழிபடுவார்க்கெல்லாம் அனுக்கிரகிக் கு முழுமுதற் கடவுளொருவனேயாமாறும், எல்லாச் சமயப் பொருளுந் தன்வயினடங்கக் கொண்டு தானவற்றிற் கதீதமாய் நிற்பது விழுமிய பொதுச்சமயமாமாறும், ஏனைச் சமயங்களெல் லாஞ்சைவவுன்னத நிலையின்கட் செலுத்துஞ் சோபான மார்க்கங்களாயமைந்து கிடக்குமாறும், கிளந்தெடுத்துக் கூறியருளினார். இங்ஙன மெல்லாச் சமயங்கண் மாட்டும் ஒற்றுமை பூண்டொழுகுஞ் சைவ சமயிகள் மற்றையோரை வலிந்து சென்று நலிந்து அவரைத்தஞ் சமயத்தின்கட்படுக்கு நோக்கமுடைய ரல்லரென்பதற்கு அவர் ஏனையோரைத் தஞ் சமயத்திற் புகுது மாறுவலியுறுத் தாமையே உறுசான்றா மென்க. இனி மற்றைச் சமயிகளோவெனின், தஞ்சமயத்திற் சேர்வார்க் கொழிய வேனையோர்க்கு முத்தி சித்தியாதென வலியுறுத்துக் கூறிப் பிறரை யெல்லாந் தஞ்சமயத்திற் றிருப்பமுயலுமாறுங் காண்க.

என்றிவ்வாறு சைவசமயப்பொருட் கூறுபாடுகளையும்

பிறசமயக் கோட்பாடுகளையும் புடைபடவொற்றியளந் துணர வல்லார், ஞானசம்பந்தப்பிள்ளையார் கருணை யின்றிச்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/179&oldid=1574596" இலிருந்து மீள்விக்கப்பட்டது