உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

  • ஞானசாகரம்

155

சமணரைக் கழுவேற்றினாரென வாய்ப்பறையறைந்து பிதற்றிட மாட்டார். மற்று அஃது அரசியல்வழிப்பட்ட நியாய தண்டனை யாமென்றுகண்டு, தெய்வப்பெற்றி யுடையரான பிள்ளையார் அற்புதவருள்வழி நின்று உய்குவார். நாவீன நாகரிக வழிப்பட்டு மெய்யறிவு திறம்பியுரைத்த அந்நண்பர் மாறுகோளுரைகண்டு, பிறர் மயங்காமைப்பொருட்டும், இது காறு மதனை யாரு மெடுத்துத் தருக்கித்து ஒழித்திடாமையின் அதுநிலையுதலுறு மென வஞ்சி யதனைக் களைதற்பொருட்டு மற்றிஃதெழுதி னாமாகலின், இது பகைமை

முதலிய

விழிகுணவயத்தான் எழுதியதன்றென வுலகந்தேர்ந்திடக்

கடவதாக.

இலக்கணவாராய்ச்சி

தமிழ்ப்பாஷைக்

குரியனவாகச்

செய்யப்பட்ட

cc

66

.

இலக்கண நூல்களும் எண்ணில்லாதன. அவையெல்லா வற்றுள்ளும் அகத்தியமென்னும் இலக்கண நூலே முன்னர்த் தோன்றியதென்பது பலர் கருத்து. அகத்தியம் முன்னும் குமரக்கடவுளாற் செய்யப்பட்டுக் குமரம்” என்னும் பெயருடைய ஓரிலக்கணநூல் இருந்ததென்பது சிலர் கருத்து. தொல்காப்பியத்திலே “வினையினீங்கி “வினையினீங்கி” என்றத னுரையிலே அகத்தியமே முற்காலத்து முதனூலென்பதூஉம், அதன் வழித்தாகிய தொல்காப்பியம் அதன் வழிநூலென்பதூஉம் பெற்றாம்” என்று கூறினர் நச்சினார்க்கினியர். அகத்திய மென்பது அகத்தியரென்னும் முனிவராற் செய்யப்பட்டமை பற்றி வந்த பெயர். இதன் கண் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் கூறப்படும். இதன் கண்ணுள்ள இயற்றமிழைத் தால்காப்பியர் வேறுவிரித்து வழிப் படுத்தார்.

.

இங்ஙனமே தமிழ்க்கு இலக்கணமன்றித் தமிழ்ப் பாஷையையும் அகத்தியரே ஆக்கினாரென்பது சிலர் கருத்து. “அகத்தியன்பயந்தசெஞ்சொல்” என்பது பாரதம். “தமிழெனு மளப்பருஞ் சலதிதந்தவன்” என்பது இராமாயணம். தமிழ்ப் பாஷைக்கு இலக்கணஞ் செய்தா ரென்பதே துணி பென்பர். வ்வகத்தியம் முதல், இடை, கடை என்னும் முச்சங்கத்தின் கண்ணும் நின்று நிலவிக் கடைச்சங்கமுடிவிலே இறந்தொழிந்த தென்பது சிலர் கருத்து. கடைச்சங்கப் புலவரு ளொருவராகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/180&oldid=1574597" இலிருந்து மீள்விக்கப்பட்டது