உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

66

மறைமலையம் - 8

நக்கீரரும் அகத்தியத் தினையே இலக்கணமாகக் கொண்டா ரென்பது இணைவறு குறுமுனி யிலக்கணம்பெறப் புனை தருமிலக்கியப் புலவர் சிங்கமே” என்னுங் காளத்திப் புராணத்தாற் பெறப்படும். பிற்காலத்தன வாகிய நன்னூல் பறப்படும்.பிற்காலத்தன விருத்தியுரை, இலக்கண விளக்கவுரை முதலியவைகளிலே சில பல சூத்திரங்கள் அகத்திய சூத்திரங்களென்று காட்டப் படுகின்றன. திராவிடப் பிரகாசிகை 27-ஆம் பக்கத்திலே அகத்தியங் கடைச்சங்கம் ஒடுங்கிய பிற்றை ஞான்றே நிலவரைப்பில் வழங்கற்பாடின்றி இறந்துபட்டதென்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்த பட்டாங்காதலினென்க என்கின்றது.

""

திராவிடப் பிரகாசிகை 18ஆம் பக்கத்தில். அகத்தியத்திலே “இயற்றமிழுள், எழுத்தாமாறும், அவற்றாற் சொல்லாய்ப்பொருளுணர்த்துமாறும், அப்பொருள் அகம் பதினாற்றிணைப் பகுதியவாமாறும் அச்சொற்பொருள்களாற் செய்யுள் யாக்குமாறும், அவை அணியுறுமாறுங் கூறப்படும் சைத்

புறமென்னும்

...

எனவும்,

66

சத்

தமிழுள் .... சட்சம், இடபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிடாதமென்று மேழிசைகள் பிறக்கு மாறும்,...... பிறவுங்கூறப்படும்" எனவும், "நாடகத்தமிழுள் கூத்துவிகற்பமும், அவிநய விகற்பமும்.... பிறவுங் கூறப்படும்"

6 எனவும்

....

கூறுகின்றது.

அகத்தியத்திலே கூறப்பட்டனவாக இங்கே வரைந்த விட ய விவரங்களெல்லாம் அகத்தியங் காணாதவர் எங்ஙனங் கூறுவர்? கடைச்சங்கமொடுங்கிய பிற்றை ஞான்றே இறந்து பட்ட அகத்தியம் இங்ஙனமெல்லாங் கண்டு கூறுதற்கு எங்ஙனம் அகப்பட்டது? அகத்தியத்திலே தொல்காப்பியத் திற்போல வமையணி யன்றி வேறணிகளுங் கூறப் பட்டனவா? அகத்தியம் தொல்காப்பியத்திற்கு முதனூல் என்பதனாலும், தொல்காப்பியத்திலே அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கமும்" என்னுஞ்சூத்திரத்திலே நச்சினார்க் கினியர் கூறிய “எழுத்துஞ்சொல்லும் பொருளு மாராய்ந்து இம்மைப்பயன் தருதலின் அகத்தியம் தொல்காப்பியம் முதலிய தமிழ்நூல்களும்" என்பதனாலும் தொல்காப்பியம் போலவே விடயங்களுடையதாகும் என்பது பெறப்படும்.

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/181&oldid=1574598" இலிருந்து மீள்விக்கப்பட்டது