உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

157

பெறப்படவே பொருளின்பின் ளின்பின் உவமையும், அதன்பின் யாப்பும் கூறப்படும் என்பது துணியப்படும். பிரகாசிகை செய்யுள் யாக்குமாறும், அவை அணியுமாறும் கூறப்படும் எனக்கூறுவதும் பொருந்துமா?

66

சட்சம், இடபம், காந்தாரம் முதலியன வடமொழி யினின்று மொழி பெயர்க்கப்பட்டனவா? அல்லவா? மற்றை அங்கக்கிரியைகள், சந்தி, விருத்தி முதலியன எவ்வியல்பின? இவையெல்லாம் வடமொழியிலே தசரூபகம் முதலியவை களிலே காணப்படவில்லையா? இங்ஙனமாகவும் மேற்படி பிரகாசிகை க 26ஆம் பக்கத்திலே 'முத்தமிழ் வழக்கு முதனூலாகிய அகத்தியத்துண் மொழி பெயர்த்துக் கூறிய இலக்கணம் யாதுமின்றென்றுணர்க” எனவும், “வடமொழிக் கண்ணுள்ள அச்சத்தநூல், கீதநூல், நாடக நூற்பொருள் களை மொழிபெயர்த்தெடுத்துக் கூறுவதன்றென வுணர்க எனவும் கூறியது பொருந்துமா?

66

ம்

பிரகாசிகை, 56-ஆம் பக்கத்திலே மதிவாணனார் நாடகத்தமிழ்நூல்' முதலிய நாடகத் தமிழ் நூல்களும் கடைச்சங்கத்தின் பிற்றை ஞான்று தோன்றியன வென்றறிக என்கிறது. இது சிலப்பதிகாரவுரைப்பாயிரத்திலே “கடைச் சங்கமிரீஇய பாண்டியருட் கவியரங்கேறிய பாண்டியன் மதிவாணனார்செய்த முதனூல்களிலுள்ள வசைக்கூத்திற்கு மறுதலையாகிய புகழ்க்கூத்தியன்ற மதிவாணர் நாடகத் தமிழ்நூல்" என்பதோடு முரணாதா? இதனைக் கடைச் சங்கத்தின் பின்தோன்றினதென்பது பொருந்துமா? இது செய்தோன் அச்சங்கமிரீஇய பாண்டியருள்ளே ஒருவனல்லனோ?

66

மேற்படி பிரகாசிகை 29-ஆம் பக்கத்திலே தலைச்சங்க வரலாற்றிலே அப்புலவர் தொகையும் பிறவுங் கூறியபின் ‘அவர்களாற் பாடப்பட்டன வேத்துணையோர் பரிபாடலும் முதுநாரையும், முதுகுருகும் களிரியாவிரையு மென

மன

த்தொடக்கத்தன' என்கின்றது. இவற்றுள்ளே வேத்துணை யோர் பரிபாடலாவது யா? வேத்துணையோர் யாவர்? 82- ஆம் பக்கத்திலும் “வேத்துணையோர் பரிபாடல்" என்பது காணப்படுகின்றது. இது சிலப்பதிகாரத்திலே வேனிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/182&oldid=1574599" இலிருந்து மீள்விக்கப்பட்டது