உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

CC

  • மறைமலையம் -8 8

காதையிலே “நெடியோன் குன்றமும்” என்பதனுரையிலே வரும் எண்ணிறந்த பரிபாடலும்” என்பதனோடு மாறு படாதா? வேத்துணையோர் பரிபாடல் என்பது இறையனார் களவியற்கண்ணும் ஈண்டுமன்றி வேறிடத்துங் காணப்படுமா? பாடப்பட்டன என்பதன்பின் வகரவுடம்படுமெய்யோ டெழுத்துப்பட்டதாய், “எண்ணிறந்த பரிபாடல்" என்பதற்கு, விரோதமில்லாதாய் நின்ற "எத்து எத்துணையோ பரிபாடல்” என்பது களவியற் பரிசோதகராலே முதல் “வேத்துணையோர் பரிபாடல்” எனப் படிக்கப்பட்டுப் பிரகடனமாய் இங்ஙனங் கொள்ளற் கிடனாயிற்றெனல் பொருந்தாதா?

சிவஞானமுநிவர் இலக்கண விளக்கச் சூறாவளியிலே அல்' என்பது விகுதியே யன்றிச் சாரியையாகாதென்று மறுத்துரைத்தார். அது வருமாறு:-

7.

66

அன்னானின்னல்

தாடையலென்புழி அல்

விகுதியென்றொழிக. அற்றுச்சாரியை பொருணிலைக் குதவிசெய்யுஞ் சிறப்புத்தோன்ற “நல்லற்று” என்ற நன்னூலார் கருத்தறியாது, அச்சாரியையெனக் கொண்டார்”

இங்ஙனமாக 9-ஆம் பக்கத்திலே "மான், கோன், தாடையலெனச் சாரியைப் பொருள் குறித்து” என்புழித் தொடையல் என்பதிலே அல் சாரியை எனத்திராவிடப் பிரகாசிகை கொண்டதென்னோ? இவற்றுள்ளே கொள்ளத் தக்கது யாது?

பிரகாசிகை 71-ஆம் பக்கத்திலே கடைச்சங்கத்தின் பிற்றை ஞான்று தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர், கல்லாடர், பேராசிரியர், சேனாவரையர், நச்சினார்க்கினிய ரென்பார் தனித்தனி உரையியற்றினார். இவருள் இளம்பூரணர் இதற்கு முதற்கணுரையியற்றினமையின் உரையாசிரியரென்றவ்வாறு வழங்கப்படுகின்றார்” என்கின்றது. கல்லாடர் கடைச்சங்கப் புலவரு ளொருவரா? அல்லரா? அவருரை கடைச்சங்கத்தின் பிற்றைஞான் றெழுதினார் என்பதற்குப் பிரமாணம் யாது? இளம்பூரணர் கல்லாடர்க்கு முந்தினவரா? பேராசிரியரா

வார் யாவர்?

இங்ஙனம் இலக்கண விடயங்களை ஆராய்ச்சிசெய்தல் மெய்ப்பொருள் பெறுதற்கும் பிறவற்றிற்குங்

காரண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/183&oldid=1574600" இலிருந்து மீள்விக்கப்பட்டது