உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

171

சுற்றிவர அல்லும்பகலு மோய்வில்லாமல் நடக்கிற மனிதனுக்கு 428 நாட்கள் செல்லுகின்றனவாம். வேகமாய்ப் போகிற ரயில்வண்டிக்கெனின் 40 நாட்கள் போதும். மேலுஞ் சத்தஞ்செல்ல 32 மணியாகுமென்றும், ஒளிக்காயினுந் தந்திக்காயினுஞ் சற்றேறக்குறைய 10 சக்கெண்டுக்குமேல் வேண்டாமென்றுங் கணக்கிட்டிருக்கின்றார்கள்.

தமிழ் நாகரிகம்

தங்கள் அரிய பத்திரிகையை வாசிக்கும் நண்பர்களில் எவரேனும், இப்பத்திரிகை வாயிலாய், அடியில் வரும் வினாக்களுக்கேற்ற உத்தரமெழுதி உண்மையை விளக்குவார் களாயின் அவர் மாட்டுப்பெரிதுங் கடப்பாடுடையே னாவேன்:

1. இந்துதேசத்தி னெப்பாங்கில் இந்துக்களின் உயர்தர சங்கீதசாஸ்திரம் விர்த்தி செய்யப்படுகிறது? தென்னிந் தியாவின் கர்னாடகராகம் சாஸ்திரரீதியை அநுசரித்ததா? அது பரதகண்ட மெங்கணும் பரவியிருக்கின்றதா? சங்கீத சாஸ்திரம் ஆரியோற்பத்தியை யுடையதாயின், மகாராஷ்டிரத் தலைவனாகிய சீவாஜி தனது ஆரியக்குடிகளுக்குச் சங்கீத சாஸ்திரங் கற்பிக்கத் தமிழ்ச்சங்கீத வித்வான்களைத் தருவித்த தென்னை?

2. சென்ற இரண்ட ாயிரம் வருஷங்களாக, இந்தியாவிற்றோன்றிய தத்துவ ஞானிகளிற் பெரும்பாலார் தன்னிந்தியாவிற் பிறந்தவர்கள் தாமென்பது வாஸ்தவமா?

3. தமிழ் லக்கண நூலாசிரியரான அகத்தியர் தமிழரோ அல்லது ஆரியரோ? அவர் ஆரியராயின், அதற் காதாரமென்னை? அவரது இலக்கணம் முதல் நூலா? ஓர் பாஷைக்கு இலக்கியங்க ளில்லாதிருப்பின், அப்பாஷைக் குரிய சிறந்ததோர் இலக்கணத்தை அமைத்தல் சாத்தியமா?

4.

ராவணன் தமிழனா? அன்றெனின் திருநெல்வேலிச் சான்றார் குலத்தார், தங்கள் முன்னோர்கள் இராவண னுடைய பிரஜைகளென்று பாராட்டி வருகிற பாரம்பரியக் காள்கைக்குப் பொருளென்னை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/196&oldid=1574615" இலிருந்து மீள்விக்கப்பட்டது