உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

181

கழிகின்றார். இனி னி யிங்ஙனம் ஒழிவாரொழியத் தமிழ் நல்லபிமான மிக்குடைய தமிழ்ப் பண்டிதர் ஒருசிலரும், ஆங்கிலமுந் தமிழும் வல்லார் ஒருசிலரும் மனவெழுச்சியான் முன்வந்து நின்று உண்மையாராய்ச்சி செய்து போதருகின்றமை யின், அந்நல்லார் வழிநின்று யாமும் எம்மாராய்ச்சியிற் கண்டவற்றை விளங்கக்காட்டத் துணிந்து இன்றிதனை விரித்துரைப்பப்புகுந்தாம். இது நிற்க. து

-

இனி மேலே காட்டிய பண்டைமொழிகளான தமிழ் முதலான சொற்களுள் இன்றுகாறும் பரவைவழக்காய் வருவது தமிழ் ஒன்றேயாம். அற்றன்று, இலத்தீன் முதலான சொற்களும் ஆ ாண்டுப் பயிற்சி செய்யப்படுதலும், கற்றறிவுடை யோராற் பேசப்படுதலுமுடையனவாய் வருதலின் அவை வழக்கு வீழ்ந்தனவாகா வெனின்; - நன்று சொன்னாய், ஒரு சொற் பரவை வழக்குடையதோ அன்றோ வெனத் துணிவு காண்டல் அவ்வாறன்று, மற்று அது கற்றறிவில்லாச் சிறுமகாரானும் பெண்டிரானும் ஆடவ ரானும் இல்லந் தோறும் உரைவழக்குற்றுப் பெருகி நடைபெறுதலொன்றானே அவ்வாறாதல் இனிது துணியப்படுமென்பது. இனி இலத்தீன் முதலிய சொற்கள் அங்ஙன மில்லந்தோறுஞ் சிறுமகாரானும் பிறரானும் வழங்கப்படுதல் காணாமையானும், தமிழோ அவ்வாறின்றி யாண்டும் பெருகிய வழக்காய்த் தென்றமிழ் நாட்டகத்தே நடைபெறுதலானும் அவ்விலத்தீன் முதலான சொற்கள் உலகவழக்கு மென்பதூ உந், தமிழொன்றே உலகவழக்குடையதாமென்பதூஉந் தேற்றமாம். எனவே, தமிழ் மொழிப்பயிற்சி செய்தல் அவ்விலத்தீன் முதலான ஏனை மொழிப்பயிற்சியினும் பயப்பாடு பெரிது டையதாமென்பது இனிது விளங்கலின், இப்பெற்றியறியாத சென்னைச் சருவ கலாசங்கத்தார் தமிழ்ப்பயிற்சி செய்தலை அறவே களைந்துவிடல் வேண்டுமென்றுரைத்தவுரை பெரிய தோர் இழுக்குமாம் ஏதமுமாம். இதுகிடக்க.

வீழ்ந்தனவா

னி அத்தமிழ்மொழி, வடமொழி இலத்தீன் முதலான மற்றவ்வெல்லாச் சொற்களினும் முற்பட்டுத் தோன்றிய பழமை யுடைத்தென்பது ஒருசிறிதுரைப்பாம். தமிழ் மொழியிலே யுள்ள சொற்களெல்லாம் அ,ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ என்னும் பன்னீருயிரெழுத்துக்களையும், இவ்வுயிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/206&oldid=1574625" இலிருந்து மீள்விக்கப்பட்டது