உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

10. இறையனாரகப் பொருளுரை வரலாறு

தங்களால் வளிப்போந்துலவும் ஞானசாகரப்’ பத்திரிகையுள் 'தொல்காப்பிய முழுமுதன்மை யென்னு தலைச்சாத்திட்டுப் பண்டிதர் சவரிராயரவர்கட்கு விடை யளிப்பான் புக்கு நிறுத்த சொல்லுடனுங் குறித்துவரு கிளவியுடனும் தாங்கள் வரைந்துள்ள வியாசத்தினை

கண்ணுற்றுப் பெரிது மகிழ்வடைந்தேன். அவையாவுஞ் சரிதவியல் பிறழாது உள்ளுறவாராய்வாரெவர்க்கும் ஒரு தலையான் உவகை யூட்டற்பாலவா மென்பது சொல்லாதே யமையும். அவ்வியாசத்துள் இறையனாரகப் பொருளுரை நூன்முகம் முசிறியாசிரியர் நீலகண்டனாராலாதல் அவர்தம் மாணாக்கருளொருவராலாதல் இயற்றப்பட்டதன்றி நக்கீர னாரி யற்றியதன்றென நுட்பங்கண்டு உய்த்துணரவைத்த நண்பர் சவரிராயரவர்கள் கூற்றைத் தாங்கள் நியாயங்காட்டி வலியுறுத்துமொழிந்தவை, இறையனாரகப்பொருளுரை யாராய்ச்சிசெய்வார் பெரும்பாலார்க்கு முண்டாவதோர் ஐயப்பட்டினை ஒருவாற்றொனொழித்தற் பயத்தவாயுள்ளன. ஆயினும், அப்பொருளுரை முற்றவும் சரிதவியலோடு நுனித் தாராயவல்லார்க்கு, வேறுசில வையங்களுங் கருத்து மாறு பாடுகளும் ஒருதலையாக நிகழ்தல் கூடுமென்றே நினைக் கின்றேன். ஆதலின் அவை நீங்குமாறு அந்நூலாராய்ச்சி யான் யானறிந்த சிலவிஷயங்களை ஈண்டு எழுதத்துணிந்தேன். நிற்க.

66

இனித்தாங்கள் எழுதிய அவ்வியாசத்தினுள் இறை யனார் களவியலுரைகண்டார் தெய்வப்புலமை நக்கீரனா ரென்பதூஉம், அந்நூலுரை வரலாறு தெரிப்பப் பாயிரவுரை கண்டார் அவர் பரம்பரையில்வந்த நீலகண்டனா ரென்ப தூஉம் நன்குணர்ந் தன்றே ஆசிரியர் சிவஞானயோகிகள் ‘கேட்போன்' ‘யாப்பு’ என்பவற்றிற்கு நீலகண்டனார் உரைத்த வுரைப்பொருளை மறுத்துத் தொல்காப்பியர் சூத்திரலிருத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/227&oldid=1574646" இலிருந்து மீள்விக்கப்பட்டது