உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

203

யுட் சிறந்ததோர் பொருள் காட்டித் தம்முரைநிறுத்துவா ராயினதூஉமென்க” என்று எழுதப்பட்டுள்ளது. அற்றேல், அச்சூத்திரவிருத்தியுள் "கடைச்சங்கத்தாருட் களவியற் பொருள்கண்ட கணக்காயனார் மகனார் நக்கீரர் 'கடைச் சங்கத்தார்க்கு மிடைச்சங்கத்தார்க்கு நூலாயிற்றுத் தொல் காப்பியம்' என்றுரைத்தாராகலின் என அம் முனிவரர்

நக்கீரனாருரைத்ததாகக் கூறியது களவியற் பாயிரத்துள்ள தனைத் தொகுத்து மொழிந்ததன்றி வேறின்றா மாகலானும், திராவிடமாபாடியத்து ‘என்மனார்’ என்னுஞ் சொற்குச் சேனாவரையருரைத்தாங்குச் சொன்முடிபு கூறிய முனிவார் கருத்தோடு, களவியல் முதற்சூத்திரத்தின்கண் அச்சொற்கு நக்கீரனார் காட்டியமுடிபு மாறுபடுதலானும், நச்சினார்க் கினியர், அடியார்க்கு நல்லாரை யுள்ளிட்ட ஆசிரியர் பலரும் பாயிரத்தோடு கூடிய களவியலுரையினையே நக்கீரனார் கண்டதென வுரைத்தலானும், பாயிரப்பொருள் கண்ட ஈரும் சூத்திரப்பொருள் கண்டாறும் வேறுவேறாவ ரெனக் கோடலும், அஃதுணர்ந்து நீலகண்டனாரைச் சிவஞான முனிவர் மறுத்தாரெனலும் யாங்ஙனம் பொருந்தும்? இங்ஙன மன்றி வித்துசிரோமணியாகிய ஸ்ரீமத் சபாபதிநாவல ரவர்கள் கூறியாங்கு நக்கீரனார் தெய்வப்பெற்றியுடையராகாத காலத்தே களவியலுக்குரை கண்டாராகலின், அஃதுணர்ந்து அம்முனிவர் அவருரையை மறுத்திட்டாரெனக்கொள்ளல் ஒருவாற்றான் அமையுமேனும், அது சரிதமுறையினை இக்காலமுறைக்கேற்ப ஆராய்வாரெல்லார்க்கு மொப்ப முடிவதன்றாகலானும், குமாரசுவாமியாற் கேட்கப்பட்டு மெய்யுரைபெற்றதாகச் சிறப்பித்துக்கூறும் பாயிரவுரை வரலாற்றோடு மாறுபடக் கூறலாமாகலானும், அகத்தி யனாரைத் தொல்காப்பியனார் சபித்திட்டாரெனக்கூறும் நச்சினார்க் கினியர் கூற்றுப் போன்று, ஆன்றோர் வழக்கின்மை காட்டப்படுமாகலானும் பொருந்தாதென்பது. இதனைத் தாங்களே நன்கு விளக்கி யுள்ளீர்கள். அற்றேல், ஈண்டுக்கூறிய வாற்றால் ஆசிரியர் ஆ சிவஞானமுனிவர், களவியற்பொருள் பாயிரத்தோடு கண்டார் நக்கீரனாரே யெனக் கொண்டு, அத்தெய்வப்புலமையுடையார் கூற்றுட் சிலவற்றைத் தங்கருத்து மாறுபாட்டான் மறுத்துரைத் தாராலெனின்; - நன்று கூறினாய்; தெய்வப்புலமையுடையா ரெனத் தாந் துணிந்துவைத்து அவருரைப்பொய்ம்மை காட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/228&oldid=1574648" இலிருந்து மீள்விக்கப்பட்டது