உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

மறைமலையம் -8 8

மறுத்திட்டா ரெனல் முரணுவதாமாகலான் அதுகருத்தன் றென்க. வேறியாதோ வெனிற் கூறுவல்; கணக்காயனார் மகனார் நக்கீரர் இறையனா ரருளிய களவியற்கு உண்மைப் பொருள் கண்டு அதனைத் தம்மகனார் கீரலிகொற்றனார்க் குரைத்தார். அவர் தம் மாணாக்கர்க்கும் அவர் தம் மாணாக்கர்க்குமாக இங்ஙனம் முசிறியாசிரியர் நீலகண்டனார் காறும் அவ்வுரைப் பொருள் எழுதப்பட்டதன்றி மறைமொழி போல் வரலாற்று முறையின் வழங்கி வரலாயிற்று. அங்ஙனம் நடந்துவந்த அவ்வரும்பெறற் பொருள் உலகில் என்று நின்று நிலவுதல் வேண்டிப் பின்வந்த அம்முசிறியாசிரியர் அதனை உரை நடையிற் றெளிவுற எழுதிவைத்தார். அங்ஙனமாய வவ்வுரை பலர் வாய்ப்படலான் மிகுந்துங் குறைந்தும் பிறழ்ந்தும் சிறிது மாறுபட்டு எழுதப் படுதலுங் கூடுமன்றே. ஆதலான் இதனுண்மையுணர்ந்தே ஆசிரியர் சிவஞானமுனிவர் அங்ஙனம் பிறழ்ந்தனவற்றுட் சிலவற்றை உய்த்துணர்ந்து, அவைமறுத்து உண்மைப்பொருள் காட்டி விளக்கியதன்றி, நக்கீரனாரது தெய்வப்புலமைக் கட்டவறிழைத்தவரல்லரென வுணர்ந்து காள்க. இக்கூறிய வாற்றால் களவியற்பொருளுணர்ந்து ரைத்தவர் நக்கீரனா ரென்பதூஉம் வரலாற்றுமுறையின்வந்த அவ்வுரைப் பொருளைப் பாயிரத்தோடு உரைநடைப்படுத்தார் நீலகண்ட னாரென்பதூஉம் பெறப்பட்டன. இதுபற்றியன்றே ஆசிரியர் நச்சினார்க்கினியரும் “வினையினீங்கி” என்னுந் தொல்காப்பிய மரபியற் சூத்திரவுரையில் பாயிர வரலாறும் நக்கீரனார் முதலாகவந்ததெனக்கொண்டு “கடைச் சங்கத் தாருட் களவியற் பொருள் கண்ட கணக்காயனார் மகனார் நக்கீரர் கடைச் சங்கத்தார்க்கும் இடைச் சங்கத்தார்க்கு நூலாயிற்றுத் தொல் காப்பியம் என்றாராகலானும்” “பிற் காலத்தார்க்கு உரையெழுதி னோரு மதுகூறிக் கரிபோக்கினா ராதலானும்” என்றும் குறிப்பினுணரவைத்தூஉமென்க.

.

அற்றேல் ஆசிரியர் நச்சினார்க்கினியாரும், அடியார்க்கு நல்லாரும், சிவஞான முனிவரரும் முறையே “நக்கீரரென வுரையெழுதினோன்பெயர் கூறுதலும்" எனவும், "நக்கீரர் உரைத்த இறையனார் பொருளுரை” யெனவும், “கடைச்சங்கத் தார்க்கு மிடைச் சங்கத்தார்க்கு நூலாயிற்றுத் தொல்காப்பிய மென நக்கீரனாருரைத்தா” ரெனவும் கூறிப்பாயிரவுரையோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/229&oldid=1574649" இலிருந்து மீள்விக்கப்பட்டது