உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

ஞானசாகரம்

6

205

சூத்திரப்பொருள்செய்தார் நக்கீரனாரெனத் தங்கருத்து வெளிப்படுத்தலான், வரலாற்றுமுறையின் வந்தபொருளை நீலகண்டனார் உரைநடைப்படுத்தாரென்றலும், அங்ஙன மாயினும் அது நக்கீரனார்உரையென வழங்குதலும், ஆன்றோர் வழக்கின்மையோடு பொருந்தாமையுமாம் பிறவெனின் அற்றன்று; “உரைநடந்துவாராநின்றமை நோக்கி” எனவும், "இனிஉரைநடந்தவாறு சொல்லுதும்” எனவும், “இங்ஙனம் வருகின்றதுரை” எனவும் வரலாற்று முறைப்பட்டதனைப் பாயிரத்துட்குறிப்பிட்டா ராதலானும், எமது சம்பிரதாயத் துள்ளும் நம்மாழ்வாரருளிய திருவாய் மொழிக்கு நம்பிள்ளை யென்பார் ஓர் பேருரையைப் பிரசங்க வாயிலாகப் புலப்படுத்த அதனை வரலாற்று முறையிற் கேட்ட அவர் மாணாக்கர் வடக்குத் திருவீதிப்பிள்ளையென்பார் உலகிற்குபகாரப்படுதல் வேண்டி அப்பொருளை திருத்தலும், அங்ஙனமாயினும் அவ்வுரை 'நம்பிள்ளையீடு எனப்பெயர் கொண்டு நிலவுதலும், அதனுள் உரைநடைப் படுத்தார் தங்கருத்துக்களையும் ஆண்டாண்டுக் கூறியிருத்தலும், மற்றும் இராமாநுஜபாஷ்யத்திற்குக் “கேட்டவைபோற்றி வெளிப் படுத்தல்” என்னும் பொருள் கொண்ட ‘சுருதப் பிகாசிகை' எனப்பெயரிய பேருரைவழங்கி வருதலுமாகிய இன்னோரன்ன வழக்கு முற்காலத்து உண்மையானும், அங்ஙனமே இறையனார் களவியலுக்கு நக்கீரனார் பொருள் காண, வரலாற்று முறைப்பட்ட வதனை முசிறியாசிரியர் உரைநடைப்படுத்தா ராயினும் அவ்வுரை நக்கீரனாரியற்றிய தென்றேகொண்டு போற்றி அங்ஙனம் ஆசிரியர் பலரும் உரைத்தாராகலின் வழக்கின்மையும் பொருந்தாமையும் ஆகாவென வுணர்ந்து கொள்க.

உரை நடையில் எழுதிவைத்

இங்ஙனம் யான்கூறியவாறுகொள்ளாது பாயிரவுரை கண்டார் நீலகண்டனார் சூத்திரவுரைகண்டார் நக்கீரனா ரெனக் கொள்ளின் அது நாகரிக சரிதவராய்ச்சி முறையோடு மாறுபடுதலின் ஆகாதென்பது; என்னை? அவ்வகப்பொருட் சூத்திரவுரை முழுவதூஉம், “பொறிகெழு கெண்டை வடவரை மேல்வைத்துப்பூமியெல்லா, நெறிகெழுசெங்கோன நெடுமாறனெல்வேலிவென்றான் என்றும் “நெல்வேலி யொன்னார் போர் வண்ணம் வாட்டியபூழியன்" என்றும்

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/230&oldid=1574650" இலிருந்து மீள்விக்கப்பட்டது