உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

மறைமலையம் -8 8

பாண்டியன் நெடுமாறனைக்குறித்த மேற்கோட் செய்யுட்கள் பலவிடத்தும் உரையாசிரியரால் எடுத்தாளப்படுதலானும், அப்பாண்டியன் வடபுலத்தினின்றும் வந்த பகைஞரை நெல்வேலிக்கண் வென்றுவாகைசூடித் தமிழ் முந் நாட்டினையுந் தன்னடிப்படுத்தாண்ட திறத்தினை அவ்வெடுத்துக் காட்டுக்கள் விளக்குதலானும் பல்லவநாட்டரசனாகிய நந்திவன்மனுடைய ய போர்த்தலைவனாகிய உதயசந்திர னென்பானுக்கும் அப் பாண்டிய அரசனுக்கு நெல்வேலிக்கும் யுத்தநடந்தமை உதயசந்திரசாதனத்தால் நன்கு விளங்குத லானும், கி.பி. 733 ஆண்டு முதல் 747 வரை ஆட்சிபுரிந்த மேனாட்டுச் சாலூக்கிய அரசனாகிய இரண்டாம் விக்ர மாதித்தனும் அப்பல்லவ அரசனாகிய நந்திவன்மனும் ஒருகாலத்தவராதல் சாதனங்களாற் பெறப்படுதலானும், ஈண்டுக்கூறியவாற்றால் நெல்வேலியுத்தம் நிகழ்ந்தகாலம் நோக்குவார்க்கு இனிதுவிளங்கக் கிடத்தலின், அவ்வமரில் வெற்றிகொண்ட பாண்டிய னெடுமாறனைப் புகழ்ந்துரைத்த முசிறியாசிரியர் நீலகண்டனாருஞ் சிறிது முன்னாகப் பின்னாக அக்காலத்தினராதல்வேண்டும். அங்ஙன மாகவே சங்கத்தார் காலத்துக்கும் பாண்டியன் நெடுமாறன் காலத்துக்கும் பன்னூற் றாண்டு வேறுபாடுண்மை யான் முற்பட்ட நக்கீரனாருரைக் கண் பின்னிகழ்ந்த நெல்வேலிச் சமரைப்பற்றிய செய்யுட்கள் மேற்கோள்பட நிற்றல் யாங்ஙன மெனமறுக்க. ஆகவே அப்பாண்டியன் காலத்தினராக வண்ணப்படு நீலகண்ட னாரே அவ்வுரை முற்றவுமெழுதி வைத்தாராற் பாலார். யானீண்டுக்கூறிய சாதவியலையும் மற்றும் அதன் விரிவையும் வித்துவசிரோமணி ம-ள-ௗ-ஸ்ரீ கனகசபைபிள்ளையவர்கள் 'மெட்ராஸ் ரிவ்யூ' என்னும் ஆங்கிலப்பத்திரிகையில் “எண்ணூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழர்” என்னுந் தலைப் பெயரிய அரிய வியாசத்தின்கீழ் எழுதிப்போந்த நுட்ப வுரையானுணர்க.

அற்றேல் ஓர் அரசனைப்புகழ்ந்து கூறுவார் அவன் முன்னோரது அருஞ்செயலை அவன்மேலேற்றிக் கூறுதல் பண்டைவழக்காதலின், கடைச்சங்கத்தாருட் சீத்தலைச் சாத்தனார் காலத்திருந்த பாண்டியனெடுஞ்செழியன் அல்லது நெடுமாறனிடத்து, அவன் முன்னோரியற்றிய முன்னிகழ்ந்த தாரு நெல்வேலிச் சமரினையேற்றிப் புனைந்து கூறியன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/231&oldid=1574651" இலிருந்து மீள்விக்கப்பட்டது