உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

207

இவ்வெடுத்துக் காட்டுக்கள் என்றாற்படு மிழுக்கென்னை யெனின் - சிலப்பதிகார நெடுஞ்செழியனுக்கு முற்பட்டாயினும் அவன்காலத்தாயினும் அங்ஙனம் ஓர்யுத்தம் நடந்தேறியதாக யாண்டும் புலப்படாமையானும் பாண்டியனெடுமாற னன்றும், அரிகேசரியென்றும் அம்மேற்கோட் செய்யுளாற் பலவிடத்தும் பெறப்படும் பெயர்கள், அந் நெடுஞ் செழியனுக்கு வழங்காமையானும் “நெல்வேலிவென்ற நின்றசீர் நெடுமாறன் எனத் திருத்தொண்டத்தொகையினும் நம்பி யாண்டார் நம்பி திருவந்தாதியினுங் கூறப்பட்டிருத்தலன்றி விரிநூலாய பெரிய புராணத்து நெடுமாறனாயனார்சரிதத்தும், பாண்டியன் நெடுமாறனெனக்குறித்தும் அவர்வடபுலத்துப் பகைஞரை வெற்றிகொண்டதனைக்குறித்தும் நன்கு கூறப் படுதலானும் அவ்வரசர் திருஞானசம்பந்த சுவாமிகள்காலத் திருந்தோராத லால், எட்டாநூற்றாண்டிலிருந்தாராக ஊகித் தற்குப்பெரிது மேற்புடைய அச்சுவாமிகள் காலமும், சாதனங்களாற் பெறப்பட்ட நெல்வேலிச்சமர்க்காலமுந் தம்மு ளொருபுடை யொத்துக் களவியற்பொருண் மேற்கோட் செய்யுட்களிற் கூறப்பட்ட பாண்டியன் நெடுமாறனும், பெரியபுராணத்துக் கூறப்படும் நெடுமாறனாயனாரும் ஒருவரேயெனத் துணிவுபட நிற்றலானும் அங்ஙனம் கூறலமையாதென்பது.

இதுகாறுங்கூறிப்போந்தவாற்றால் இறையனாரகப் பொருட் சூத்திரவுரை கண்டார் மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனாரென்பதூஉம், வரலாற்று முறையின்வந்த அவ்வுரைப்பொருளை உரைநடையிற் பாயிரத்தோடு எழுதிவைத்தார் முசிறியாசிரியர் நீலகண்டனாரென்பதூஉம், அங்ஙனமது பலகாலஞ்சென்ற பின்னர்ஒருவராலெழுதி வைக்கப் பெற்றதாயினும் அதனை நக்கீரனார்செய்ததாகவே ஆசிரியர்பலரும் கொண்டுபோற்றி வந்தாரென்பதூஉம், ஆ ஆசிரியர் சிவஞானமுனிவரும் அங்ஙனமேகருதி அப் பொருளுட் சில பிறழ்ந்துவந்தமை உய்த்துணர்ந்து அங்ஙனம் வந்தமைக்கேது பல்லாசிரியர் கருத்தொடும் வந்தமையே யெனக் காண்டு மாறியவற்றை மறுத்துநக்கீரனாரது உண்மைக் கருத்துக் கண்டு நிறீஇயினாரென்பதூஉம் அதனால் இறை யனாரகப் பொருளுரை ‘கேட்டவை போற்றிவிளக்கல்' என்னு மோர்வகை வரலாற்றுரையேயாமென்பதூஉம் பெறப்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/232&oldid=1574652" இலிருந்து மீள்விக்கப்பட்டது