உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209

11. ஆனந்தக்குற்றம் 1

'நட்பரணெய்திபகைமரணமைந்தனு, ளொப்புடைக் குறிக்கோளொருமூன்றாகும்' எனவும் தானமுங்கணமுங்கூறிக் கணத்திற்குப் பயனுங் கூறினார். பன்னிருபாட்டியன் முதலிய நூல்களாற்பொய்கையார் முதலிய நல்லிசைப்புலவரும்

பாட்டியல் செய்திருப்பதாகக் காணப்படுகின்றது. ஆகவே சங்கமிருந்த நல்லிசைப்புலவர் காலத்தும் பற்பல பாட்டியல் வழங்கியவெனவே எண்ணுகின்றேன்.

யின்மங்கலமுதலியன

சங்கத்தார்

நூலினும் சிவஞானயோகிகள் கச்சியப்பர் முதலாயினார் நூலினும் உளவோவெனின் உளவென்பதே தேற்றம்.

9

எங்ஙனமெனில் மங்கலச்சொல் தனித்தும் அடை யடுத்தும் முதற்பாட்டின் கண் முதற்சீரேயன்றி இடைகடை யினும் வரப்பெறுமென்பது பாட்டியல் விதியாதலின் பத்துப் பாட்டின்கண், 9 - வது பாட்டில் புகழென்று மங்கலம் அடையடுத்துவந்தது. 8-வது பாட்டில் ‘பிற’ என்பதாற் நழுவிய வாழியென்னும் மங்கலம் அவ்வாறுவந்தது. 6-வது பாட்டில் முந்நீர் அவ்வாறு வந்தது 5-வது பாட்டில் உலகமென்பது அவ்வாறு நனந்தலையென அடையடுத்துவந்தது. 4-வது பாட்டில் பிறவென்பதாற் நழுவிய விசும்பென்பது அவ்வாறு வந்தது. 2-வது பாட்டில் மங்கலச்சொல்லின் பரியாயமாகிய யாணரென்பது அறாஅவென அடையடுத்து வந்தது. மற்றைப் பாட்டின்கண் விதந்துகூறிய மங்கலச்சொற்களே முதற்கண் வந்தன. சிந்தாமணிக்கண் உலகமென்பது மூவாமுதல்வாவென அடையடுத்துவந்தது, சில ஆசிரியர் நூன்முதற்கண்ணும் சில ஆசிரியர் நூற்குறுப்பாதல்பற்றிப் பாயிரமுகத்தும் சிலர் ஈரிடத்தும் மங்கலங்கூறல் வழக்காதலின் மணிமேகலையின் கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/234&oldid=1574654" இலிருந்து மீள்விக்கப்பட்டது