உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

மறைமலையம் - 8

பதிகத்தின்கண் இளங்கதிர் ஞாயிறென அடையடுத்தும் நூன்முதற்கண் உலகமெனத் தனித்தும் வந்தன.

னி, புறநானூற்றின்கண் மாலையென்னு மங்கலச் சொல்லின் பரியாயமாகிய கண்ணியென்பதே வந்தது. ஆண்டும் நியதிதப்பிலது. இனிக்காஞ்சிப் புராணத்தையும் தணிகைப் புராணத்தையும் நோக்கின் நூலகத்துறுப்பாகிய கடவுள் வாழ்த்திற் சேர்க்காது புறத்தே யியற்றிய காப்புச் செய்யுளில் மங்கலங்கருதற்பாற்றன்று; காஞ்சிப்புராணத்துட் கடவுள் வாழ்த்தின் முதற்கண் ‘சங்கு' என்னு மங்கலச் சொல்லும் தணிகைப்புராணத்துக்கடவுள் வாழ்த்து முதற்கண் உலகு என்னுமங்கலமும் நியதி தப்பாது வந்தன. முதற்கட் பாடுதல் பற்றிக் காப்புச்செய்யுளின் கண்ணும் மங்கலங் கருது மாசிரியரு முளர். இம்மங்கலங் கூறல் நூன்முதற்கண் அல்லது பொதுப் பாயிர முதற்கண் அல்லது சிறப்புப்பாயிரமுதற்கண் என விதந்துகூறாது பொதுப்பட முதற்கண் எனக்கூறலால் இலக் கணக்கொத்துடை யாரும் வடநூன்முறைபற்றி நூலு முரையும் பாயிரமும் தாமேசெய்வான்புக்குச் சிறப்புப்பாயிரம் நூற்கு முன்னிற்கு முறைபற்றி மதிவெயில் விரிக்கும் என மங்கலங் கூறினார். பிரயோக விவேகநூலார் நீர்கொண்டசென்னியென மங்கலங்கூறினார்.

ஒவ்வோர் முறைபற்றி முதலென்பது பல திறப்படலின் மங்கலங் கூறுமிடனும் பலவாயின. இனிச் சிவஞான யோகிகள் மங்கலங் கூறுங்கருத்தாற் சங்கேந்து மெனக்கூறினா ரல்ல ரியல் பான மைந்தது எனின் அது பொருந்தாது. உலகெலாமெனச் சிவதத்துவலிவேகத்திலும், சீர்கொளென முதுமொழி வெண்பாவிலும், சீருங் கல்வியுமெனக் குளத்தூர்ப் பதிற்றுப்பத் தந்தாதியினும் திருமால் பிரமனெனக் கலைசைப் பதிற்றுப்பத் தந்தாதியினும் கார்கொண்ட வெனவும் மணிபூத்த வெனவும் ஈரிடத்து விநாயகர் பிள்ளைத்தமிழினும் மணி கொண்ட சீர்கொண்ட என ஈரிடத்து அம்பிகை பிள்ளைத் தமிழினும் திருத்தங்கு என முல்லையந்தாதியினும் தவறாது மங்கலங் கூறலான். இனிக் கச்சியப்பர் திருவானைக்காப் புராணத்து விநாயகர் வணக்கத்தை யகத்துறுப்பாகக் கொண்டு நிலம் போற்று மென மங்கலங்கூறிப் பின்னும் பலவிடத்துக் கூறினார். பேரூர்ப் புராணத்தும் அவ்வாறே பலவிடத்து மங்கலங் கூறினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/235&oldid=1574656" இலிருந்து மீள்விக்கப்பட்டது