உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

211

பட்டினத்தடிகளது நான்மணிமாலை மும்மணிக்கோவை முதலிய பிரபந்தங்களினும் மங்கலந் தவறாது காணப்படு கின்றன. மெய்கண்ட சாத்திர முதலிய வீட்டுநூலின் கண்ணும் நித்திய மங்கள வடிவனாகிய பரம்பொருளது நாமங்களாகிய மங்கலச் சொற்கள் நியதி தப்பாது வந்தன. பாட்டுடைத் தலைவனுக்கே பயன்படற் பாலவாய கண முதலிய பொருத்தங்கள் சில பொது நூலிடைக் காணப் பெறா. அதுபற்றி அவைபாட்டியல் விதியின் வழீஇயினவெனல் பொருந்தாது. இறையனார் அன்பென்பது மங்கலமெனக் காண்டமை குறித்துப் புகழேந்தியார் நேசரென்பதும் மங்கலமெனக் கொண்டார். உய்த்துநோக்கின் மங்கல மின்றி வந்த நூலொன்று மிலையென்றே யெண்ணுகின்றேன்.

முதலிடை யிறுதி சிதைந்த நூலும் முன்பின் மாறிக் கிடக்குநூலும் சிலவுள. அவை யீண்டைக்குப் பிரமாண மாகா.

நன்னவென

இனி நச்சினார்க்கினியர்கருத்து நோக்கின் மலைபடு கடாத்தில் தீயினன்ன வொண்செங்காந்த ளென்னுமிடத்து முதற் சீர்க்கயலும் தசாங்கத்தயலும் அமங்கலமாகா வென்னும் பாட்டியல் விதியை மாறாகக்கொண்டு தீயின் நன்னவென இடர்ப்பட்டுப் பிரித்து இயற்பெயராகிய நன்னனை யடுத்துத் தீயென்னும் மங்கலம் வந்தது என ஆளவந்த பிள்ளையார் குற்றங்கூறினார். அதனால் நச்சினார்க்கினியர் ‘தீ’ என்பது இன்சாரியையுந் அன்னவென்பதையும் அடுத்து நின்றதேயன்றி இயற்பெயரை யடுத்ததில்லை யென்றும் இப்பாட்டுப் படர்க்கையாய் நிற்றலின் முன்னிலைப் பெயராக்கிக் குற்றங்கூற லுமமையாதெனவும் நியாயங்கூறி இப் பாட்டகத்து ஆனந்தக் குற்றமில்லை யென மறுத்தாரேயன்றி ஆனந்தக் குற்றமே யில்லையென மறுக்கவில்லை. பாடினோர் தீயின் அன்னவெனக் கருதிப்பாடினும் தீயின் நன்னவெனப் பிரித்துக் கோடற்கிடமாக அமைதலாகிய குற்றமில்லாத இன்னோ ரன்னவற்றையும் 'தொகையார் பொருள் பலவாய்த் தோன்ற' லென்னு மானந்தக் குற்றமாகப் பின்னுள்ளோர் சேர்த்தார். இவ்வாறு அகத்தியனாருந் தொல்காப்பியனாருங் கூறா மையால் போலியாகச் சேர்த்த அவ்வானந்தக் குற்றத்தையே நச்சினார்க்கினியர் மறுத்தாரேயன்றி அகத்தியனார் தொல் காப்பியனாராற் கொள்ளப்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/236&oldid=1574657" இலிருந்து மீள்விக்கப்பட்டது