உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

227

எனவும்,

“நரிகளெல்லாம்பெருங்குதிரையாக்கியவாறன்றேயுன்பேரருளே”

எனவும்,

“அரியொடு பிரமற் களவறி யொண்ணான்

நரியைக் குதிரை யாக்கிய நன்மையும்”

எனவுந் தாமே தம் அருட்டிருவாக்கான் மொழிந்திடுதலின், இறைவன்செய்தருளிய அத்திருவிளையாடல் மாணிக்கவாசகர் பொருட்டேயாமென்பது இனிது தேறப்படும். இப்பெற்றி தேறாத ஆங்கிலமகனான இன்ஸ் என்பவர் சிலப்பதிகாரத் தானும் திருவிளையாடலானும் வன்னியுங்கிணறுமழைத்த அற்புத நிகழ்ச்சி யிரண்டாதல்போல நரியைக் குதிரையாக்கிய வ்வற்புதமும் மாணிக்கவாசகர்பொருட்டொன்றும் அதற்கு முன்னே நிகழ்ந்த வேறொன்றுமாக இரண்டாகலாமெனவும், அங்ஙனமஃதிரண்டாகவே அப்பர்சுவாமிகளாற் குறித்திடப் பட்ட அவ்வற்புதநிகழ்ச்சி மாணிக்கவாசகர் மேலதாமாறில்லை யெனவுந் தமக்குத் தோன்றியவாறேதருக்க வரம்பு பிறழ்ந்தெழு வாராயினார். வன்னியுங் கிணறு மழைத்த திருவிளையாடல் இரண்டாதல்போல நரியைக் குதிரையாக்கிய திருவிளை யாடலும் இரண்டாகல் வேண்டுமென்னும் யாப்புறவு யாங்ஙனம்பெற்றீரெனக் கடாவுவார்க்கு அத்துரைமகன் இறுக்குமாறின்றாம். வன்னியுங் கிணறுமழைத்த திருவிளை யாடல் இரண்டாதற்குப் பிரமாணம் யாண்டுங் கண்டிலம். சிலப்பதிகாரத்தினும் திருவிளையாடலினுங் கண்டாம். அவ்வாறே நரியைக் குதிரையாக்கிய திருவிளையாடலு மிரண்டாதற்குப் பிரமாணம் யாண்டுங் கண்டிலம். இங்ஙனம் பிரமாணப்பொருள் காட்ட வல்லாதார் தாமும் தமக்குத் தோன்றியவாறெல்லாங் குழறி உண்மையாராய்ச்சிசெய்வா மெனப் புகுதல் "மைத்துனர்பல்கி மருந்திற்றெளியாத பித்த னென்றெள்ளி” நகையாடுதற்கேதுவாம். இங்ஙனந் தருக்கநெறி பிழைத்தெழுதப்படும் போலிப்பொருள்களும் ஆங்கிலப்

பாை

யில் வரையப்படுதலிற் சிறந்தெடுத்துப் பாராட்டப்படு கின்றன. அரசியன்மொழியல்லாத தமிழ் முதலிய சொற்களி லெழுதப்படும் அரியபெரிய வுண்மைப் பொருள்களுஞ் சிறவாதொழிகின்றன. என்னை! என்னை! இம்மயக்கவுல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/252&oldid=1574673" இலிருந்து மீள்விக்கப்பட்டது