உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

மறைமலையம் -8 – 8

கின்றன்மை யிருந்தவாறு! இது கிடக்க, நரியைக் குதிரையாக்கிய திருவி ளயாடல் மாணிக்கவாசகர் பொருட்டன்றிப் பிறிதாகவும் இயற்றப்பட்டதுண் டென்பதற்குப் பிரமாணம் யாண்டுங் காணப்படாமையானும், அத்திருவிளையாடல் தம்பொருட்டே நிகழ்த்தப்பட்டதென மாணிக்கவாசக சுவாமிகள் தாமேதம் அருமைத்திருவாக்காற் கிளந்தெடுத்து மொழிந்தருளுதலானும், கல்லாடம் முதலான தொன்னூல் களும் அத்திருவிளையாடல் மாணிக்கவாசகர் பொருட்டே நிகழ்த்தப்பட்டதெனத் துணிவு தோன்றக்காட்டு தலானும் அத்திருவிளையாடல் பிறிதொன்றுளதெனக்கோடல் ஒருவாற்றானும் பொருந்துமாறில்லை. ஆகவே, மாணிக்க வாசகர் பொருட்டுச் செய்யப்பட்ட அத்திருவிளையாடல் அப்பர்சுவாமிகளான் மாணிக்கவாசகர் காலம் ஆறாம்நூற்றாண்டின் முன்னதாதல் இனிது துணியப்படும். இது கிடக்க.

மொழிந்தருளப்பட்டமையானே,

L

இனி, நம்ஆப்தநண்பர் திருமலைக்கொழுந்துபிள்ளை யவர்கள், மாணிக்கவாசகர் காலம் கடைச்சங்க நிலைபெற்று விளங்கிய கி-பி முதனூற்றாண்டின்கட்படுவதாமெனக் கூறிய உரைப்பொருளிற் கருத்தொருப்பாடுறுகின்றிலம். என்னை? கடைச்சங்கத்தார் காலத்துச் செய்யுளியல்வழக்கின்கட் படுவதன்றாய், அக்காலைத் தமிழ்க்குப் புறம்பாய்க் கிடந்த விருத்தப்பாட்டுக்கள் திருவாசகத்தின் கட்காணப்படுதலா னென்பது.கடைச்சங்கத்தார் செந்தமிழ்ச்செய்யுளியல் வழக்கின் கண்ணே விரவப்பெறாத விருத்தப்பாக்கள் உலகியலாறாய் மற்றுத் தமிழ்ப் புலனெறிவழக்கிற் புகுதப்பெறுதற்கு அச் சங்கத்தார் காலத்தின்பின் இரண்டு மூன்று நூற்றாண்டு கழிதல் வேண்டுமாதலான் மாணிக்கவாசகர் கடைச்சங்கத்தார்காலத் திருந்தாரெனக்கோடல் சரிதவழுவாமென்றுணர்க. அற்றேல், விருத்தப்பாக்கள் பெருகிய செய்யுள்வழக்காய் நடைபெறு தற்குத் தொடங்கிய அப்பர்சுவாமிகளிருந்த ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியிலே மாணிக்கவாசகரிருந்தாரெனக் கொள்ளாமோவெனின்; - கொள்ளாம், திருவாசகத்தின்கண் விருத்தப்பாக்கள் மிக்கு விரவப்பெறாது ஒருசிலவே காணக் கிடத்தலானும், தமிழ்ச் செய்யுளியல் வழக்கிற்கே சிறப்பாவன வாகிய அகவலுங்கலியும் பெரிதுமயங்கிக் கிடத்தலானும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/253&oldid=1574674" இலிருந்து மீள்விக்கப்பட்டது