உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

229

தமிழ்ச்செய்யுட்கள் முறைமுறையே வழக்குவீழ்ந்துவிருத்தப் பாக்களிடையிடையே விரவப்பெறுகின்ற

காலத்தே

திருவாசகமருளிச் செய்த மாணிக்கவாசகரிருந்தாரெனல் ஒருதலையாம். அக்காலந்தானியாதென்று நுணுகி நோக்கு வார்க்கு அது கி-பி மூன்றாம் நூற்றாண்டாமென்ப தினிது விளங்கும். அல்லதூஉம், மாணிக்கவாசகர், நக்கீரர் முதலான தெய்வப்புலவர் விளங்கிய காலத்திருந்தாராயின் அவரைக் குறித்தேதும், மொழிந்திடுவர்; அங்ஙனமொன்றுஞ் சொல்லா மையானும், மதுரையிலாய்ந்த தமிழைப்பற்றிப்பேச வந்த விடத்தும் “உயர்மதிற்கூடலி னாய்ந்த வொண்டீந்தமிழின்றுறை என்று இறந்தகாலத்தானுரைத்துக் கடைச்சங்க காலந்தமக்கு முன்னதாதல் குறிப்பானுணாவைத்தலானும் அவர்காலமும் வேறே கடைச்சங்ககாலமும் வேறே யென்பதுணரற்பாற்று. கடைச்சங்ககாலத்திருந்தாராயின் “உயர்மதிற்கூடலி னாயு மொண்டீந்தமிழின் றுறை” என்று கூறிவிடுவார்; அங்ஙனங் கூறுதலாற் செய்யுள் சிதையுமாறுமின்று. இதுகி க்க.

""

இனிக் கல்லாடம் சங்கச்செய்யுளாதலின் அதன்கட் குறிப்பிடப்பட்ட பிட்டுக்குமண்சுமத்தன் முதலியவற்றானே அவ்வற்புதங்கள் நிகழ்தற்கேதுவாயிருந்த மாணிக்கவாசகர் காலம் கடைச்சங்ககாலமெனத் துணியப்படுமாம் பிறவெனின்;- நன்று கடாயினாய், கல்லாடம் சங்கச்செய்யுளேயாமென்று துணிதற்குப் பிரமாணம் யாண்டுங்காணப்படாமையானும், அல்லது சங்கச் செய்யுளென்றே கோடுமாயினும் அது பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு முதலியவற்றின்கட்சே யென்னையெனுங்கட நிகழ்தலானும், சங்கச்செய்யுண் மேற்கோள்கொண்டுரை யெழுதுவாரான இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பரிமேலழகியார் முதலான உரையாசிரியன் மார் யாரும் அதன்கண் மேற்கோள்கொண்டு தம்முரையிற் குறித்திடாமையானும், சங்கத்தார்காலத்து அகவற்செய்யு ளமைப்பிற்குங் கல்லாடவகவற்செய்யுளமைப் பிற்கும் வேறுபாடு பெரிது காணக்கிடத்தலானும் பிறவாற்றானுங் கல்லாடநூல் சங்கத்தார் காலத்ததாதல் செல்லாதென்பதூஉம்.

ராமை

ம்

செந்தமிழ்நாட்டின்கட்பரவியுலாவும் ஞானசாகரத்தி னருமைபெருமை யித்தன்மைத்தென்றியாம் புகலமாட்டுவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/254&oldid=1574675" இலிருந்து மீள்விக்கப்பட்டது