உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

மறைமலையம் 8 –

மல்லேம். அதன்கட் கலைவல்லபண்டிதர்களாலெழுதப்பட்ட உயர்தரவிஷயங்கள் பல்லோர்க்கும் பயன்றருவனவாமென்பது அதனைப் படிப்பார்க்கேநன்குதோன்றும். அச்சீரியப்பத்திரிகை எம்போன்ற சிற்றறிவினர்க்கு அறிவுகொளுத்தி இந்நிலவுலகின் யாண்டும் பரவிஎன்றும் நின்று நிலவத்திருவருளைச் சிந்திக் கின்றேம்.

அவாவொன்றே மேற்கொண்டு இத்தகையமாட்சி நிறைந்த பத்திரிகைவாயிலாய் எம் புல்லறிவுக்கெட்டிய சிறியதோர் வியாசத்தையெழுதத்துணிந்தே மாயினும், பெரியோர் சொற் சுவைபொருட்சுவை குன்றிய விதன்கண் குறைகாணா தெம்மைக்கடைக்கணிக்கவேண்டுகின்றேம்.

மெய்ந்நலவிளக்கம்: மெய், நலம், விளக்கம் ஆகிய மும்மொழிகளடங்கிய ஒருதொடர்.இவற்றில், மெய்யெனினும் உடம்பெனினுமொக்கும், நலமெனினும் சுகமெனினுமொக்கும், விளக்கமென்பது விளக்கிக்காட்டுவதொன்றாம். ஆகவே உடம்பின் சுகத்தைப்பேணியொழுகும் விதியை விளக்கிக் காட்டுவதான் இப்பெயர்த்தாயிற்று. அற்றேல், சரீரசுகம்பேணு வதவசியமாமோவெனின், மக்கட்கு ஆன்மாசரீரமென விரண்டுளவேனும், ஆன்மாவின்றிச் சரீரமியங்கவும், சரீரமின்றி ஆன்மா வியங்கவுங் கூடற்பாலனவல்ல. ஆன்மாவுக்கறிவே சிறந்தது. யாந்திருவருளைச்சிந்திக்கவும், பிறர்க்குதவவும், நமக்குரிய தொழிலை யெட்டுணையுங் குறைவின்றி யியற்றவு மறிவே காரணமாம். ஆகையான், இத்துணைச்சிறப்பினதாகிய அறிவைப்பெருகச்செய்வது நம்மொவ்வொரு வருக்குமின்றி யமையாக் கடப்பாடாம். சரீரசுகம்பேணுது பல வேறுநூற் பயிற்சிசெய்து கலைகள்கற்றுக் கல்வியறிவை வளரச்செய்வோ மென்பாருளராலோவெனின், அற்றன்று. என்னை? அங்ஙன முரைப்பரேற் சுவரின்றிச் சித்திரம் வரையப்புகுவாரின் பெற்றியடைவர்; அறிவு சரீரத்துடனொருமித்து அபிவிர்த்தி யடையற்பாலது. சரீரசுகத்தைக் கவனியாது பின்னாட்பிE யுற்றுப் படுகிடையாய் வாழ்நாளெல்லாம் துன்பத்திலே செலுத்துபவரெங்ஙனமறிவையோங்கச்செய்வர்? சரீரபலங் குன்றக்குன்ற அறிவின்விரிவுங் குன்றுமென்பதறியார்யாரோ! உடல்வலியுள்ளவன் ஊன்றிய அறிவைக்கொள்வான்; அஃதில்லாதான் பேதையனாவான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/255&oldid=1574676" இலிருந்து மீள்விக்கப்பட்டது