உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

231

பிணிகள்விதியினாலாதல், தற்செயலாலாதல், பேய்க் கோளாற்றினா லாதல் வருமென்றுரைக்கும் பேதையருமுளர். அவனன்றியணுவுமசையாதாகையான், நோயுமவனாலேவப் படுவதெனின், யாம் என்செய்வோம். பட்டே தீரல் தகுதி யென்றுரைப்பாருமுளர்.யாம் சுகதேசிகளாகவும், மனவெழுச்சி யுடைய வர்களாகவு மிருக்கக் கடவுள் விரும்புவதின்றோ? அவனாற் படைப்புண்ட இயற்கைப்பொருள்கள் யாவும் நம்பொருட்டே யமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் நற்குணந் தீயகுணமிரண்டுமுள. தக்கவாறு கையாடாமல் வீணிலவைகளை யழித்தலால் என்றும் யாம் நோயுற்றுத் துன்புறுகின்றோம். கொழுந்துவிட்டெரியும் விளக்கைக் கைப்பற்றமுயன்றகுழந்தை தன்கை சுடப்படுதலால் கையை வாங்கிக்கொள்வதுமன்றிப் பின்னரங்ஙனஞ்செய்யத்

அப்பொருள்களைத்

துணிதலுமில்லை. அதுபோன்று வருந்தும் நோயினரும் ஒளடதந்தேடுவதுமன்றிக் காரணத்தைத் தேடி அதனைவிலக்கி யொழுக முயலுகின்றனர். இவ்வாறு நோயைத் தள்ளற்குங் கொள்ளற்குமிடமாகிய இயற்கைப்புறப்பொருள்கடாம் யாவை? அவை எவ்வாறு சுகவழிகளை யேற்றவுந் தாழ்த்தவும் வல்லனவாமென்பதையெடுத்துரைக்கப் பெறுவ திவ்விஷ யத்தின் கருத்தாமென்றுணர்க.

இனி, புறப்பொருள்களை இரண்டுகூறாகவகுப்பாரு முளர். அவை: வாயுமண்டலம், நீர், பலவேறுணவுப் பொருள் கள், மா, புட்கள் முதலியவும் பிறவுமாகிய அசையும் பொருள்களும்; நிலம், புல்பூண்டுமுதலான தாவரவர்க்கங்கள் ல்லங்கள் முதலியவும் பிறவுமாகிய அசையாப் பொருள் களுமாம். இனி, சாத்திரவழியாக ஆராயுமிடத்து எல்லாப் பொருள்களும் கனபதார்த்தங்கள், திரவபதார்த்தங்கள், வாயுபதார்த்தங்கள் என முப்பகுப்புடையனவாம். இவற்றுள்ளும் வாயுபதார்த்த மாகிய வாயுமண்டலமே மக்கட்கு நிரம்ப அவசியமுடைய தாகும். என்னை? உணவின்றி நாலைந்துநாளும், பானமின்றி ஒரு நாளும் உயிர்பிழைக்கினும், வாயுமண்டல முயிரோடிருப்பதரிது.

மின்றி யோரைந்து நிமிஷமு தாய்க்கருப்பையினின்று புறந்தோன்றின ஒருகுழவி, பிராணனுக்காதரமாக அக்கணத்தே கொள்வது வாயுவேயாம். நாம்பிறப்புமுதலிறப்புவரையும், விழித்திருப்பினும், தூங்கினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/256&oldid=1574677" இலிருந்து மீள்விக்கப்பட்டது