உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

மறைமலையம் -8 8

இடைவிடாமல் வாயுவை யுள்ளிழுத்தும் புறம்போக்கியும் வாழ்கின்றோமாதலால் அது நம்மவர் உயிர்வாழ்க்கைக் கெவ்வளவு அவசியமாமென ஈண்டு விரித்துரைக்கப்புகுவது அநாவசியமென விடுத்தேம். ஆயினும், அச்சிறந்த வாயுமண்டலம் மிகவும் மாசற்றிருக்கவேண்டு மென்பது கவனிக்கற்பாலதாம். என்னையெனின், இப்பூமண்டல மனைத்தும் பரந்துநூறுமைல் ஆழங்கொண்டு அசைந்து திரியும் வாயுமண்டலம் மக்கட்கென்றே அமைந்திருக்கையில் எங்ஙன மசுத்தமாகுமென்று வினவுவார்க்கு அஃதசுத்தம் பெறுமா மென்பது காட்டிவிடுப்பாம். மக்களானும் ஏனைப்புறப் பொருளானும் அசுத்தம் பெறுகின்ற வாயுமண்டலந்திரும்பவு மப்பொருள்களானே சுத்திகரிக்கப்படுவதெங்ஙனமாமென்பது ஈண்டுக்காட்டுவாம். அதைமுற்றிலும் நன்குணரும்பொருட்டு வாயுமண்டலத்தினியல்பு இனைத்தென ஆராய்வாம்.

வாயுமண்டலத்தின்கண்ணுள்ள சுத்தவாயு, நிறம்சுவை நாற்றமுதலியனவின்றி, நிறை, அளவு, விரிதல் முதலான

குணங்கள் பெற்றுளது. அதன்கண் தொகுப்பாயுள்ள

வாயுக்களாவன; உயிர்வாயு, உப்புவாயு, கரிவாயு, நீர்வாயு என்பனவாம். இவைகளில் உயிர்வாயுவே அதிமுக்கியமானது மவசியமானதுமாம். உயிர்களுக்காதாரமாவதிவ்வொன்றே யென்றுதெளிக. இஃதின்றி உயிர்கள் ஒருகணமும் பிழைத்திரா. நெருப்பிற்குங்காரணமிதுவே. நாம் நாடோறு மருந்துகின்ற நீரும் உயிர்வாயுவின் சம்பந்தத்தினாலே யேற்பட்டுளதாம். 9- பங்குநீரில் 8-பங்கு இவ்வாயு உண்டென்றே உணர்ந்துகொள்க.

இனி, உப்புவாயுவின் றன்மையென்னவெனின், வாயு மண்டல மடங்கலும் உயிர்வாயு ஒருபங்கானால் உ உப்புவாயு நாலுபங்கதிமுளதாம். இவ்வாயு உயிர்வாயுவுடன் கலந்திரா விடின், இவ்வுலகின்கண்ணுள்ள எல்லாப்பொருள்களுமுடனே நீராய்ப்போகுமென்பது நிச்சயம். உயிர்வாயுவின் வலியைத் தணிப்பதற்கென்றே கடவுளிதை இப்பிரபஞ்சத்திலமைத்து வாயுமண்டலத்திற் பொருத்தினாரென்று நாம்கோடற்பாலது. அவரது ஞானமும் மாட்சியுமித்தன்மையவாமென அறிவீன ராகிய யாமளந்தறிய மாட்டுவேமல்லேம். உலகிலுள்ள எல்லா உயிர்ப்பொருள்கண்மாட்டும் இவ்வாயுவை மிகுதியுங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/257&oldid=1574678" இலிருந்து மீள்விக்கப்பட்டது