உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

233

காணலாம். தீக்கொழுந்தையிதனுட் புகுத்தினால் அஃதுடனே

யணைந்துபோகாநிற்கும்.

னிக்கரிவாயுவென்ன

வன்றாராய்வாம்.

வாயுமண்டலத் தின் எப்பகுதியிலேனும் சிறிதளவு வாயுவை எடுத்துப்பிரித்துச் சீர்தூக்கின் 2500 பங்கிலிஃதோர் பங்காகக் காணப்படும். இதனமைப்புத் திறனென்னையெனின், உலகியற் பொருள்கள் யாவும் யாவும் கரியென்ற ஓர்முதற் பொருளை யுள்ளடக்கியதாம். அவைகள் தீப்பற்றி எரியுங்கால் இக்கரி, அவைகளின் மற்றைய அம்சங்களினின்று வேறுபிரிக்கப்பட்டு வாயுமண்டலத்தின்

உயிர் வாயுவோ டொற்றித்துக்

கரிவாயுவைப் பயப்பதாமென அறிகின்றோம். இது மற்ற வாயுவினும் மிக்க நிறையுள்ளது. உப்புவாயுப்போன்று இதுவும் நெருப்பெரியப் பண்ணாது. மக்கள்புறம்போக்கும் வாயு, பூமியினின்று வெளிப்படும்வாயு, எரிமலை, அடுத்தவாயு, முதலியன இவ்வாயுவை மிகுதியும் உடையனவாம். மேலேகூறிய அளவோடுவாயுமண்டலத்தில் இது பொருந்தியுள்ளதாயின், மக்கட்கோர் தீங்கும் பயவாதா மெனின்,- அற்றன்று அளவுக்குமிஞ்சிய அமுதும் நஞ்சாம்' ஆகையான் இவ்வாயு தன்னளவுக்கோர் சிறிதேனும் அதிகப்படின் உடனே பலவேறு பிணியையும் தேகவலிக்குறை வையும் பயப்பதொன்றாமென்க.

இனி, நான்காவது அம்சவாயுவாகிய நீர்வாயுவென்பது என்னையெனிற் கூறுவாம். தண்ணீர் நிறைந்த ஓர்கலத்தை வாயுமண்டலத்தின்கண் வைப்போமாயிற் கொஞ்சம் கொஞ்சமாக நங்கட்புலனுக்குத் தோன்றாமலே அக்கலத்தின் நீர் ஓர்துளியுமின்றி மறையுமாறு காணப்படும். கடனீரும் அருவி நீரும் ஏரிநீரும் அத்தன்மையனவேயாகும். ஞாயிற்றின் கதிரால் ஆவியாயெழும்பிய இவ்வாயு, வாயுமண்டலத்தால் இழுத்துக் கொள்ளப்படுவனவாம். முகிலும், பனியும், மழையும், உண்டாவதற்குக் காரணமுமிதுவேயாம். இந்நீராவியினளவு சீதோட்டின நிலையைச்சார்ந்து நிற்கின்றது. அஃதெவ்வா றெனின், வெயில்வெப்பம் மிகுந்திருக்கும் நாளில் நீர்வாயு அதிகமாகஎழுப்பப்பட்டும், குறைந்த நாளில் குறைவாக எழுப்பப்படுவதுமாம். ஆகையானே, நம்மவர் உரக்கவெயிற் காய்ந்தால் அன்றுமழையை எதிர்நோக்குகின்றனர். இந்நீர்வாயு வின்றி மக்கள் தேகமும் புல்பூண்டுகளும் உலர்ந்து வற்றிப்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/258&oldid=1574679" இலிருந்து மீள்விக்கப்பட்டது